'என்னா வெயிலு'.. ரூ.1 லட்சம் செலவில் ஷவர்.. தினம் 5 முறை நனைந்து ஆட்டம் போடும் யானை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெயிலின் கொடுமையை மனிதர்களாலேயே தாங்க முடியாத சூழலில், இயற்கையோடு இணைந்து வாழ்ந்துகொண்டிருந்த விலங்கினங்கள் பொறுத்துக்கொள்வது என்பது சற்று கடினம்தான்.

'என்னா வெயிலு'.. ரூ.1 லட்சம் செலவில் ஷவர்.. தினம் 5 முறை நனைந்து ஆட்டம் போடும் யானை!

அதனால்தான் என்னவோ திருச்சியைச் சேர்ந்த யானை ஒன்றுக்கு குளிப்பதற்கான ஷவர் அமைக்க மட்டும் 1 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள திருவானைக்கோவில் என்கிற ஏரியாவில் உள்ளது ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்.

இங்குள்ள 17 வயதேயான அகிலா என்கிற யானைக்குட்டியினால் நகர வெப்பநிலையான 41 டிகிரி செல்சியஸை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு நாளைக்கு 3 முதல் 5 முறை வரை தனக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக ஷவரில் குளித்து ஆட்டம் போட்டு உடல் சூட்டை தணித்துக்கொள்கிறது.

2011-ஆம் ஆண்டு அஸாமில் இருந்து இந்த கோவிலுக்கு 9 வயதாக இருக்கும்போது கொண்டுவரப்பட்ட அகிலா என்கிற இந்த யானைக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 1 லட்சம் ரூபாய் செலவில் ஷவர் அமைப்பதற்கான நிதியைத் தந்திருக்கிறார். அதன் பின் கோவிலில் அமைக்கப்பட்ட பெரிய கூரை போன்ற இந்த ஷவருக்கு 20 பிபி பைப்பும், அதற்கேற்றவாறு பம்பில் இருந்து தண்ணீரும் விடப்படுகிறது.

இதனால் தினமும் மழையில் நனைவது போன்றதொரு ஃபீலிங் கிடைப்பதால் குளித்து விளையாண்டு அகிலா மகிழ்ச்சியுடன் இருப்பதாக அகிலா யானையின் 8 வருட பாகனான மஹத் கூறியுள்ளார்.

HEAT, SUMMER, TEMPRATURE, ELEPHANT, SHOWER, TRICHY