'அதை' மட்டும் 'செஞ்சு' நிரூபிச்சிட்டீங்கனா... '1 கோடி' பரிசா தாறோம்... யாரு வேணாலும் 'களத்துல' குதிக்கலாம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவுவதாக எழுந்த வதந்தியை அடுத்து கோழிக்கறி, முட்டை விற்பனை ஒரேயடியாக சரிந்து விட்டது. இதனால் கோழி மற்றும் முட்டை விற்பனையாளர்கள் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 ஆகியவற்றை இலவசமாக வழங்கியும் விற்பனையில் சிறிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திகைத்து போய் உள்ளனர்.

'அதை' மட்டும் 'செஞ்சு' நிரூபிச்சிட்டீங்கனா... '1 கோடி' பரிசா தாறோம்... யாரு வேணாலும் 'களத்துல' குதிக்கலாம்!

இந்த நிலையில் கோழிக்கறி மற்றும் முட்டையால் கொரோனா வைரஸ் பரவுவதாக பரிசோதனை மூலம் அறிவித்தால் ரூபாய் 1 கோடி பரிசு வழங்குவதாக தமிழ்நாடு முட்டை, கோழி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணி நாமக்கல்லில் அறிவித்து இருக்கிறார். மேலும் கொரோனா வைரஸ் பீதியால் விற்பனை ஆகாமல் சுமார் 15 கோடி முட்டைகள் தேங்கி இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்து இருக்கிறார்.