தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல மாநில போலீசால் தேடப்பட்ட ரவுடி.. நெல்லையில் என்கவுன்டர்.. யார் இந்த நீராவி முருகன்..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல மாநில போலீசால் தேடப்பட்ட ரவுடி.. நெல்லையில் என்கவுன்டர்.. யார் இந்த நீராவி முருகன்..?

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன் (வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல்வேறு மாநிலங்களில் நீராவி முருகன் மீது வழக்குகள் உள்ளது.

இவர் தனது கூட்டாளியான பவானி ஈஸ்வரனுடம் ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீராவி முருகன் கும்பலை தேடி வந்தனர்.

Rowdy Niravi Murugan shot dead in police encounter

இந்த நிலையில் நீராவி முருகன், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அக்கசாலை விநாயகர் கோவில் தெருவிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுட்து இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த கும்பல் பதுங்கி இருந்த வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டனர்.

அப்போது நீராவி முருகன் உள்ளிட்ட கும்பல் காரில் ஏறி தப்ப முயனறதாக சொல்லப்படுகிறது. ஆனால் கார் சாலையோர சாக்கடை கால்வாய்க்குள் சிக்கியுள்ளது. உடனே அந்த காரை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

அந்த காரை போலீசார் சுற்றி வளைத்தபோது, நீராவி முருகன் அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றதாக சொல்லப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் நீராவி முருகன் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மற்ற நபர்கள் தப்பி ஓடிய நிலையில், கார் டிரைவர் மரிய ரகுநாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

ENCOUNTER, NIRAVI MURUGAN

மற்ற செய்திகள்