"பொண்ணுங்க மட்டும் ஏன் டிக்கெட் எடுக்கல".. "அட.. வேர்ல்டுல எங்கயும் இப்படி இல்ல".. ருமேனியர் எடுத்த பரபரப்பு முடிவு
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை, 17, பிப்ரவரி 2022: தமிழகத்தில் உள்ள நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்கிற விஷயத்தை பேருந்து பயணத்தின்போது அறிந்துகொண்ட ருமேனிய நாட்டவர் கோவையில் திமுக தொண்டரா மாறி வாக்கு சேகரித்து வரும் விஷயம் வைரலாகி வருகிறது.
உள்ளாட்சி தேர்தல்
சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு சனிக்கிழமை (19-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் தான், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் எனும் திமுக ஆட்சியின் நடப்புத்திட்டத்தை தெரிந்துகொண்ட ருமேனிய மனிதர் ஒருவர், திமுக கட்சி கொடி அணிந்து, உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்காக கோவையில் வாக்கு சேகரித்து வரும் ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
டிக்கெட் எடுக்காத பக்கத்து சிட் பெண்..
அவர் பேருந்தில் பயணிக்கும் போது பயணச்சீட்டை காசுகொடுத்து வாங்கியதாகவும், ஆனால் அருகில் இருந்த பெண் பயணச்சீட்டை காசு கொடுத்து வாங்கவில்லை என்பதை கவனித்தபோது அதிர்ச்சியும் ஆச்சரியமும் உண்டானதாக குறிப்பிட்டவர் தான், பிறகுதான் அந்த பெண் மட்டும்தான் வாங்கவில்லை என்று நினைத்த தன் எண்ணம் தவறானது என உணர்ந்திருக்கிரார்.
அனைத்து பெண்களுமா?
ஆம், அந்த பேருந்தில் உள்ள அனைத்து பெண்களும் காசுகொடுத்து பயணச்சீட்டினை வாங்கவில்லை என்பது அப்போது தான் அவருக்கு மெல்ல, தாமதமாக தெரியவந்துள்ளது. இப்படி அனைத்து பெண்களுமே பயணச்சீட்டு வாங்கவில்லை என்கிற விஷயம் தெரிந்ததும், காரணம் தெரிந்தே ஆக வேண்டும் என மனிதர் தலைகால் புரியாமல் மனசுக்குள்ளேயே அனத்திக் கொண்டிருந்துள்ளார்.
அனைத்து பெண்களும் ஏன் பயணச்சீட்டு வாங்கவில்லை?
வடிவேலு பாணியில் கேட்கலமா வேணாமா? கேட்டால் தப்பாகிவிடுமா? என எண்ணிக்கொண்டிருந்தவர், சரி கேட்டு தான் பார்ப்போம், என்று பேருந்தில் இருந்தவர்களிடம் நேரடியாக அனைத்து பெண்களும் ஏன் பயணச்சீட்டு வாங்கவில்லை என கேட்டுவிட்டு, அவர்களின் பதிலை கேட்கத் தயாரானார். அப்போதுதான் அவருக்கு தமிழக அரசின் செயல் திட்டத்தை பேருந்தில் இருந்த பயணிகள் விளக்கியுள்ளனர்.
தமிழக அரசின் செயல் திட்டம்.. ருமேனியகாரர் எடுத்த முடிவு
ஆம், தமிழகத்தில் உள்ள நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று, பேருந்தில் இருப்பவர்கள் கூற, ஆச்சரியப்பட்டு போன அந்த ருமேனிய நாட்டுக்காரர், “அட.. உலகில் பல்வேறு நாடுகளுக்கு நான் சென்றுள்ளேன் இதுபோன்ற திட்டத்தை நான் கண்டதேயில்லை.
எனவே நான் சுற்றுலா வந்துள்ள இந்த நேரத்தில் இங்கு நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தொண்டராக மாறி, திமுகவுக்கு வாக்கு சேகரிக்கவிருக்கிறேன்!” என்று முடிவெடுத்து கோவையில் வாக்கு சேகரித்து வருகிறார்.
மற்ற செய்திகள்