இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னை அரசு மருத்துவமனையில் சூப்பர் வசதி.. அரசு அதிரடி
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியில் எப்போதும் முன்னணி வகிக்கும் மாநிலமான தமிழகம் இப்போது மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. தமிழகத்தில் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனைகளில் மட்டுமே இருந்த ரோபாட்டிக் அறுவை சிகிச்சை கருவியை சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நிறுவியுள்ளது தமிழக அரசு.
நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்.. கப்பலுக்குள்ள இருக்கது என்னன்னு தெரியுமா? கவலையில் உலக நாடுகள்
35 கோடி
பெண்களுக்கான கர்ப்பப்பை சிகிச்சை, புற்றுநோய் கட்டிகள் அகற்றுவது, சிறுநீரக அறுவை சிகிச்சையை மிகத் துல்லியமாகவும் மேம்பட்ட திறனுடனும் மேற்கொள்ள இந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சை கருவி பேருதவியாக இருக்கும் என்கிறார் மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அதிகாரியான டாக்டர்.அனந்தகுமார்.
இதுகுறித்துப் பேசிய அவர்," இந்தக் கருவியின் மூலம் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை கூட மிகவும் துல்லியமாக மேற்கொள்ளலாம். இத்தனை மதிப்பு வாய்ந்த கருவியினை ஏழை எளிய மக்கள் இலவசமாக சிகிச்சை பெற தமிழக அரசு அளித்துள்ளது" என்கிறார்.
அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட இந்த அதி நவீன கருவியின் விலை 35 கோடியாகும்.இதனை நிறுவ சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் 50 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி
ஓமந்தூரார் மருத்துவமனையின் புற்றுநோயியல், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர், இருதய அறுவை சிகிச்சை, கை சீரமைப்பு அறுவை சிகிச்சை ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் இந்தக் கருவியை இயக்குவது குறித்து கேரளாவில் சிறப்பு பயிற்சி பெற்று வந்திருக்கின்றனர்.
அனந்தகுமார் இதுப்பற்றி கூறும்போது," இந்த கருவியை ஒரே நேரத்தில் இரண்டு நபர்கள் இயக்கலாம். வேறு இடத்தில் இருந்தும் மருத்துவர்களால் இந்தக் கருவியை இயக்க முடியும்" என்றார்.
ராட்சத கைகள்
இந்த அதிநுட்ப அறுவை சிகிச்சை கருவியில் ஆறு ரோபாட்டிக் கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கருவியில் உள்ள திரையின் முன்னர் அமர்ந்திருக்கும் மருத்துவர் கொடுக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி ரோபாட்டிக் கரங்கள் மிகவும் துல்லியமாக அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும்.
இத்தனை வசதிகளுடன் கூடிய இந்த ரோபாட்டிக் அறுவை சிகிச்சை இயந்திரம் அடுத்தவாரம் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. இந்த விழாவில் முதல்வர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போதையில் நண்பரை கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த சம்பவம்.. சிசிடிவி காட்சிகளை பார்த்து மிரண்ட போலீஸ்..!
மற்ற செய்திகள்