“தொடல.. கட்டிப்பிடிக்கல.. க்ரஷ் மட்டும்தான்.. மனசுல என்ன இருக்குனு ரச்சிதா சொல்லணும்”.. ராபர்ட் EXCLUSIVE
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | மெடிக்கல் போயிட்டு வர்றேன்னு போன கணவர்.. Wait பண்ண மனைவிக்கு 1 1/2 வருஷம் கழிச்சு காத்திருந்த ஷாக்!!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினா, அதன் பின்னர் மகேஸ்வரி வெளியேறினர். கடைசியாக நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், 50வது நாளன்று ஞாயிற்று கிழமை எபிசோடில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து விலகியுள்ள ராபர்ட் மாஸ்டர், Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, “ஒரு குழந்தை போல் ரச்சிதாவிடம் விளையாட்டாக பேசுவேன். பழகுவேன். அது க்ரஷ் தான். ரச்சிதா தன் மனதில் என்ன இருக்கிறது என்பதை நேரடியாக சொல்லி இருக்கலாம்.
ரச்சிதாவுக்கும் என்னை பிடிக்காமல் இல்லை. நான் சாப்பிடவில்லை என்றால் அவரும் சாப்பிட மாட்டார். இது போன்ற பல விஷயங்களை நீங்களே பார்த்திருப்பீர்கள். பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களை பொறுத்தவரை நான் பார்க்காத போது ரச்சிதா என்னை பார்த்து எக்ஸ்பிரஷன் பண்ணியதாக சொல்வார்கள். நான் நேரடியாக பார்த்ததில்லை.
நான் நேரடியாக சொல்கிறேன். எனக்கு அவர் மீது கிரஷ் இருக்கிறது என்பதை, இப்போதும் நான் அதை ஒப்புக்கொள்கிறேன். சொல்லவே செய்கிறேன். ஆனால் அவர் நேரடியாக சொல்ல வேண்டும். அவர் வெளியே வந்து தான் தெரியும். நட்பா என்ன என்பது அவர் கையில் தான் இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்