காரில் ஒட்டப்பட்டிருந்த 'ஸ்டிக்கரில்' இருந்த 'அந்த' வார்த்தை...! 'டவுட் ஆன போலீசார்...' 'பேக் சீட் அடியில பார்த்தப்போ...' - அதோடு மட்டுமல்லாமல் மேலும் ஒரு அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பல லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை கடத்தி செல்ல கொள்ளையர்கள் பயன்படுத்திய நூதன முறை போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காரில் ஒட்டப்பட்டிருந்த 'ஸ்டிக்கரில்' இருந்த 'அந்த' வார்த்தை...! 'டவுட் ஆன போலீசார்...' 'பேக் சீட் அடியில பார்த்தப்போ...' - அதோடு மட்டுமல்லாமல் மேலும் ஒரு அதிர்ச்சி...!

பொதுவாகவே காவல்துறையினர் ஒரு சில நேரங்களில், நீதிபதி சிம்பல் கொண்ட வண்டிகளை மடக்கமாட்டார்கள். இதனை சாதகமாக பயன்படுத்தி ஒரு திருட்டு கும்பல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 'நீதிபதி' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரும், அதற்கு பின்னால் ஒரு கண்டெய்னர் லாரியும் வந்துள்ளது.

அப்போது காரை தவிர்த்து பின்னாடி வந்த லாரியை சோதனையிட காவல்துறையினர் சென்ற போது, நீதிபதி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் இருந்த சிலர் வந்து, 'நீதிபதி உடன் வந்த லாரியை மடக்கக்கூடாது' என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்ட போது, பின் இருக்கைகளை அகற்றி விட்டு மது பாட்டில்களை பதுக்கி இருப்பது தெரிய வந்தது.

அதோடு பின்னாடி வந்த கண்டெய்னர் லாரி மற்றும் அதற்கு பின்னால் வந்த இரண்டு கார்களையும் சோதனையிட்ட போலீசார் 3,357 மதுபாட்டில்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

போலீசார் சோதனையில் ஈடுபடும் போது, வாகனங்களில் இருந்த அனைவரும் தப்பி ஓடியுள்ளனர். அதன்பின் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சோனு என்பவனை மட்டும் போலிசார் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்