பத்து பேர் முகத்துலையும் 'மங்கி' குல்லா.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடுமை.. நடுங்கி போன குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் முதியவர் வீட்டில் குரங்கு குல்லா அணிந்த பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்து பேர் முகத்துலையும் 'மங்கி' குல்லா.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடுமை.. நடுங்கி போன குடும்பம்!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே கடமலைபுத்தூர் கிராமத்தில் ஜெயபாரதன் (வயது 70). மற்றும் மனைவி லட்சுமிபாய் தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடன் மகன் ஜெகநாதன், மருமகள் ஹேமலதா, இவரது மகன் கவின் ஆகியோரும் வசித்து வருகின்றனர்.

பத்துக்கும் மேற்பட்ட மங்கி குல்லா அணிந்த மர்ம நபர்கள்:

இந்நிலையில் நேற்று சுமார் இரவு 8.45 மணி அளவில், திடீரென பத்துக்கும் மேற்பட்டோர் மங்கி குல்லா அணிந்த மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் சுதாரித்து கொள்வதற்குள் அனைவரையும் கட்டிப் போட்டுவிட்டு வீட்டில் இருந்து அனைத்து அறைகளுக்கும் உள்ளே சென்றுள்ளனர். இப்படி ஒரு சம்பவம் திடீரென நடக்கும் என சற்றும் எதிர்பார்க்காத குடும்பத்தினர் பதறிப் போயினர். யாருக்காவது தகவல் கொடுக்கலாம் என்றால் செல்போனை பிடுங்கிக் கொண்டனர். தங்களை காப்பாற்ற யாரும் இல்லையா என பயந்துப் போயினர்.

இரண்டு பீரோ உடைப்பு:

மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள்  பெண்களின் கழுத்தில் இருந்த மாங்கல்ய தங்கச்சங்கிலி  உட்பட 20 சவரன் தங்க நகைகள், ரூபாய் 30 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஆக அனைத்தையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் நகைகளை எடுத்து கொண்டபின் டிவியின் சவுண்டை அதிகமாக வைத்துவிட்டு அனைத்து விளக்குகளையும் அணைத்த பின்னர் மர்ம நபர்கள் கதவை சாத்திவிட்டு வீட்டின் எதிரே உள்ள கேட்டை பூட்டி சாவியைக் கொண்டு பூட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.

வாயால் கத்தியை எடுத்து முடிச்சுகளை கட்டை அறுத்துள்ளார்:

சிறிது நேரம் கழித்த பிறகு, வீட்டிலிருந்த கஜவரதன் மெல்ல மெல்ல அவர் இருந்த இடத்தில் இருந்து நகர்ந்து வந்து தன்னுடைய வாயால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துள்ளார். அதன் பின்னர் ஒவ்வொருவரின் கைகளிலும் கட்டப்பட்டிருந்த கட்டுகளின் முடிச்சுகளை அறுத்து எடுத்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அச்சிறுபாக்கம் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

ROBBERS, JEWELERY, MONEY, CHENGALPATTU, திருடர்கள், செங்கல்பட்டு, வீடு

மற்ற செய்திகள்