வானம் பார்க்கும் தொழில்நுட்பமே.. குனிந்து பாதாளம் பார்.. உலகத்தின் மிக நீளமான சவக்குழி இதுதானோ?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த 2 வயது குழந்தை சுஜித் மரணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. 80 மணி நேரத்துக்கும் மேலாக போராடியும் சுஜித்தின் உயிரற்ற உடலை மட்டுமே மீட்க முடிந்தது.

வானம் பார்க்கும் தொழில்நுட்பமே.. குனிந்து பாதாளம் பார்.. உலகத்தின் மிக நீளமான சவக்குழி இதுதானோ?

சுஜித் மரணத்திற்கு அமைச்சர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை ஒன்றை சுஜித்துக்காக வெளியிட்டு இருக்கிறார்.

 

அதில்,'' உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ? நடக்க கூடாதது நடந்தேறி விட்டது. மரணத்தில் பாடம் படிப்பது மடமை சமூகம். மரணத்திலும் கல்லாதது அடிமைச் சமூகம். மரணக்குழிக்குள் மண் விழுவதற்குள் அனைத்து குழிகளையும் மூடுக.

மெழுகுவர்த்தி அணைவதற்குள் கண்ணீரை துடைத்துவிடு. வானம் பார்க்கும் தொழில்நுட்பமே குனிந்து பாதாளம் பார். இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச்சாவுகள்,'' என தெரிவித்து இருக்கிறார்.

#RIPSUJITH