அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு உயர்வு.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60-ஆக உயர்வதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த 23-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை அடுத்து 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார். இதில் 25, 26-ம் தேதிகளில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் இன்று தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என அறிவித்தார்.
அரசுப் பணியாளர்களின் வயது தற்போது அமலில் உள்ள 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உத்தரவு அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியிலான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், (1/2) pic.twitter.com/RuOIWXzwqy
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 25, 2021
தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59-ஆக இருக்கும் நிலையில், இதனை 60-ஆக உயர்த்தி தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்