'அதுக்குள்ள 51,208 பேரா?.. சென்னையில் அசுர வேகத்தில் முன்பதிவாகும் பேருந்து டிக்கெட்டுகள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பயணிப்பதற்காக இதுவரை 51 ஆயிரத்து 208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்குவரத்து துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்ல 33 ஆயிரத்து 870 பேரும், பிற இடங்களில் இருந்து 17 ஆயிரத்து 338 பயணிகளும் இப்போதே முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் இதுவரை, 2 கோடியே 55 ஆயிரம் ரூபாய், தமிழக போக்குவரத்துத் துறைக்கு வருவாயாக வசூலாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்துகளை முன்பதிவு செய்துகொள்ள விரும்புபவர்கள் கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com உள்ளிட்ட இணையதளங்கள் மூலமும் பதிவு செய்துகொள்ளலாம்.