களை கட்டிய 'குடியரசு' தின கொண்டாட்டம்... 'தமிழக' முதல்வர் வழங்கிய முக்கிய 'விருதுகள்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

72 ஆவது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று கொடியேற்றினார்.

களை கட்டிய 'குடியரசு' தின கொண்டாட்டம்... 'தமிழக' முதல்வர் வழங்கிய முக்கிய 'விருதுகள்'!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.

கால்நடை மருத்துவர் பிரகாஷ், ராணிப்பேட்டையை சேர்ந்த ஆசிரியை முல்லை மற்றும் மதுரையை சேர்ந்த ரயில் ஓட்டுநர் சுரேஷ் ஆகியோருக்கு தமிழகத்தில் வீர தீர செயல்கள் புரிந்ததற்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

அதே போல, தமிழகத்தில்  கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கான 'காந்தியடிகள் காவலர் பதக்கம்' வழங்கப்பட்டது. பெண் ஆய்வாளர் மகுடீஸ்வரி, உதவி ஆய்வாளர் செல்வராஜ் , தலைமைக் காவலர்கள் சண்முகநாதன், ராஜசேகரன் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்களை வழங்கினார்.

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான கோப்பையும் வழங்கப்பட்டது. முதலிடத்தை சேலம் நகர காவல் நிலையமும், இரண்டாம் இடத்தை திருவண்ணாமலை நகர காவல் நிலையமும், மூன்றாம் இடத்தை கோட்டூர்புரம் காவல் நிலையமும் பிடித்தது.

தமிழக காவல் துறையின் வீர சாகசங்கள் நடைபெற்ற நிலையில், கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

மற்ற செய்திகள்