'அச்சுறுத்தும் கொரோனா'... 'தயவு செஞ்சு இந்த மருந்தை நீங்களே எடுத்துக்காதீங்க'... சற்று ஆறுதலான செய்தியை சொன்ன சுகாதாரத்துறைச் செயலாளர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

'அச்சுறுத்தும் கொரோனா'... 'தயவு செஞ்சு இந்த மருந்தை நீங்களே எடுத்துக்காதீங்க'... சற்று ஆறுதலான செய்தியை சொன்ன சுகாதாரத்துறைச் செயலாளர்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தேசிய அளவில் 2,620 நபர்களும் தமிழக அளவில் 78 நபர்களும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது. தற்போது 95,048 பேர் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48,289 பேர் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்தியுள்ளனர். அதன் சதவீதம்  50.8 ஆகும். கொரோனா கவனிப்பு மையங்களில் 8,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது  8.85 சதவீதம்  ஆகும்.

Remdesivir not for all patients, TN Health Secretary Radhakrishnan

24,569 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் சதவீதம் 25.8 விழுக்காடு ஆகும். புதிதாகத் தொற்று ஏற்பட்ட 13,000 நபர்கள் இன்று சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வருவர். கொரோனா அறிகுறிகள் இருந்தால் காய்ச்சல் முகாம்களில் சென்று சோதனை செய்துகொள்ளுங்கள்.  தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்குப் போதுமான அளவில் படுக்கை வசதிகள் உள்ளன.படுக்கைகள் கிடைக்காது என்று யாரும் அச்சம் அடைய வேண்டாம் .

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆக்சிஜன் கசிவு வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். சிக்கலான தருணங்களில் 108 அல்லது 0444- 6122300 என்று எண்களை அழையுங்கள். அதே போல 104 எண்ணையும் அழைக்கலாம். பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம். தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது.

Remdesivir not for all patients, TN Health Secretary Radhakrishnan

ரெம்டிசிவிர் மருந்தை மக்கள் தாமாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது. மருத்துவரின் பரிந்துரைப்படி தான் எடுத்துக்கொள்ள வேண்டும்'' எனக் கூறினார். இதற்கிடையே கொரோனா நிச்சயம் கட்டுக்குள் வந்துவிடும். எனவே மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம். சென்னை அண்ணா நகர் புறநகர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்பட உள்ளது என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

மற்ற செய்திகள்