'பிளாஸ்டிக் கேனோடு மணமேடைக்கு ஏறிய உறவினர்'... 'நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வேற லெவல் பா'... அசந்துபோன உறவினர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எனது தங்கைக்கு இதை விட மகிழ்ச்சியான ஹிப்ட் வேறு என்ன இருக்க முடியும் என, அந்த உறவினர் கூறியுள்ளார்.

'பிளாஸ்டிக் கேனோடு மணமேடைக்கு ஏறிய உறவினர்'... 'நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வேற லெவல் பா'... அசந்துபோன உறவினர்கள்!

திருமண நிகழ்ச்சிகளில் மணமக்களுக்கு, அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலரும் பல விதமான பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம். அது காலகாலத்திற்கும் என்றும் அவர்களின் நினைவில் எப்போதும் நிற்கும். சிலர் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வழங்குவது வழக்கம். ஆனால் சேலத்தில் ஒருவர் வழங்கிய பரிசுப் பொருள் மணமக்களுக்கு மட்டுமல்லாது, திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் மறக்காத பரிசுப் பொருளாக மாறிப் போனது.

வேலூர் பகுதியைச் சேர்ந்த முகமது ரகுபதின் என்பவருக்கும், கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியைச் சேர்ந்த ஜபசூம் நசியா என்பவருக்கும் சேலம் கோட்டை பகுதியில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்திச் சென்றனர்.

Relatives give newly married TN couple petrol as wedding gift

அந்த வகையில் மணமகளின் உறவினர் முகமது காசிம் என்பவர் கொண்டுவந்த பரிசுப் பொருளைப் பார்த்து திருமண மண்டபத்திலிருந்த அனைவரும் வியப்படைந்தனர். ஒரு பிளாஸ்டிக் கேனில் ஐந்து லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டு, அந்த கேன்இன் மீது 'பெட்ரோல் ஐந்து லிட்டர்' என எழுதப்பட்டிருந்தது. மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோலை முகமது காவிம் திருமண பரிசாக வழங்கியதும், திருமண மண்டபமே கலகலப்பானது. மணமக்களும் எந்த வித தயக்கமும் இன்றி, சிரித்த முகத்தோடு பெட்ரோலை பெற்றுக்கொண்டு, புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

Relatives give newly married TN couple petrol as wedding gift

இதுகுறித்து முகமது காசிம் கூறும்போது, ''பெட்ரோல் விலை தங்கம் போல கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இப்படியே சென்றால் தமிழகத்தில் பெட்ரோல் என்பது விலை மதிப்பு மிக்க பொருளாக மாறிவிடும். எனவே எனது தங்கைக்கு வேறு ஏதேனும் ஒரு ஹிப்ட் வழங்குவதை விட, ஐந்து லிட்டர் பெட்ரோல் கொடுத்ததால் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு வாகனத்தில் மகிழ்ச்சியாகச் சுற்றுவார்கள்'' எனக் கூறினார்.

மற்ற செய்திகள்