தொழிலதிபர் ரீட்டா 'தற்கொலைக்கு' இதுதான் காரணம்?.. கணவர் அதிர்ச்சித் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டொயோட்டா நிறுவனத்தின் டீலரான லான்சன் டொயோட்டா, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனது கிளைகளை கொண்டுள்ளது. இதன் சேர்மேனாக இருப்பவர் தொழிலதிபர் லங்கா லிங்கம். இவரது மனைவி ரீட்டா லங்கா லிங்கம். இவர் அதே நிறுவனத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு லாவண்யா என்ற பெண்ணும் லிவாஸ் என்ற மகனும் உள்ளனர். மகள் லாவண்யா சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் நிலையில், மகன் லிவாஸ் திருமணமாகி சென்னையில் தந்தையுடன் தொழிலை கவனித்து வருகிறார்.

தொழிலதிபர் ரீட்டா 'தற்கொலைக்கு' இதுதான் காரணம்?.. கணவர் அதிர்ச்சித் தகவல்!

யாரும் எதிர்பாராத விதமாக இணை இயக்குனர் ரீட்டா லங்கா, நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். நேற்று காலை ரீட்டாவின் வீட்டுக்கு சென்ற சூப்பர்வைசர் இயேசுபாதம் என்பவர் இதனை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழில்துறையில் ஏற்பட்டிருக்கும் சரிவு, கணவன்-மனைவிக்கு இடையில் மனஸ்தாபம் என பல்வேறு காரணங்கள் அவரது மரணத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.மேலும் இது தற்கொலையா? இல்லை கொலையா? என்ற சந்தேகமும் காவல்துறை மத்தியில் எழுந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னர் தான் இது குறித்த தெளிவான விளக்கம் கிடைக்கும் என்பதால் போலீசார் பிரேத அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் ரீட்டாவின் கணவர் லங்கா லிங்கம், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் எஃப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் ரீட்டாவின் மரணம்குறித்து தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் லிங்கம்,'' என்னுடைய மனைவியின் அம்மா சமீபத்தில் இறந்து விட்டார். அதனால் அவர் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். இதனால் வெளிநாட்டில் வசிக்கும் எனது மகளை சென்னை வருமாறு ரீட்டா கேட்டுக்கொண்டார்.ஆனால் என் மகள் வரவில்லை. இதனால் ரீட்டா மேலும் மன வருத்தத்தில் இருந்தார்.

கடந்த 11-ம் தேதி இருவரும் கோயம்பேடு அலுவலகத்துக்கு சென்றோம்.அலுவலகம் முடிந்து நான் பேட்மிண்டன் கிளப்புக்கு விளையாட சென்றேன், ரீட்டா வீட்டிற்கு சென்றார்.அதன்பிறகு நான் ரீட்டாவை சந்திக்கவில்லை. போன் செய்தேன் அவர் எடுக்கவில்லை. தொடர்ந்து அவரது தோழி மேகலா ரீட்டாவுக்கு போன் செய்துள்ளார். அப்போதும் ரீட்டா போன் எடுக்கவில்லை. இதனால் நேற்று காலை வீட்டிற்கு சென்று கதவைத் தட்டியுள்ளார். கதவை ரீட்டா திறக்கவில்லை, பின்னர் காவலாளியை அழைத்து தகவல் தெரிவித்து இருக்கிறார். அதன் பின்னர் தான் ரீட்டா தற்கொலை செய்துகொண்ட விவரம் எனக்குத் தெரியவந்தது,'' என தெரிவித்துள்ளார்.

SUICIDEATTEMPT, REETA, LANSONTOYOTA