"3 வருஷம் ஆயிடுச்சு.." மீனவர் வலையில் சிக்கிய 'அதிசயம்'.. " அட, இது எப்படி நம்ம ஊருல?!"
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில், அரிய வகை மீன் ஒன்று சிக்கி உள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
Also Read | பெரும் சோகம்.! அறுவை சிகிச்சை செய்த 5வது நாளில் அதிர்ச்சி.. Ex அழகிக்கு பின்னர் நேர்ந்த துயரம்.. !
பாம்பன் தென்கடல் பகுதியில், சுமார் 100 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், சமீபத்தில் கரை திரும்பி இருந்தனர்.
அப்போது அந்த மீனவர்களின் வலையில், அரிய வகை மீனான சூரிய மீன் ஒன்று சிக்கி உள்ளது. அந்த மீனின் வால் பகுதியான துடுப்பு பகுதி உருமாறி இருந்ததால், இந்த மீனை பாம்பன் மக்கள் நேற்று ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.
அரிய வகை சூரிய மீன்கள்
சுமார் 60 கிலோ வரை எடை கொண்ட அரிய வகை சூரிய மீனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்த வகை மீன்கள், மித வெப்பமான கடல் பகுதியில் மட்டுமே வாழ்கின்றன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் முதல் 600 மீட்டர் ஆழத்தில் இந்த சூரிய மீன்கள் வாழும்.
மேலும் சூரிய வெளிச்சம் இருக்கும் பகுதியில் வாழும் குணம் உடைய மீன்கள் என்பதால், இதனை ஓசியன் சன் ஃபிஷ் என்றும் அழைப்பார்கள். அதே போல, பெண் சூரிய மீன்கள் ஒரே நேரத்தில் பல லட்சக் கணக்கான முட்டையிடும் தன்மையும் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நமது நாட்டில், இந்த மீன்கள் உணவுக்காக எங்கேயும் வாங்கப்படுவது கிடையாது.
3 வருடங்களுக்கு பிறகு..
ஆனால் அதே வேளையில், ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த சூரிய வகை மீன்கள் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது போன்ற அரிய வகை மீன் ஆனது, நமது நாட்டில் உள்ள கடல் பகுதியில் எப்போதாவது தான் மீனவர்கள் வலையில் சிக்கும். முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு பாம்பன் மீனவர்கள் வலையில் சூரிய மீன்கள் சிக்கி இருந்தன.
பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய சூரிய மீன், சுமார் 60 கிலோ வரை எடை கொண்டாலும், மொத்தமாக இந்த சூரிய மீன்கள், சுமார் 3000 கிலோ எடை வரை வளரும் தன்மையும் கொண்டதாகும். நமது கடல் பகுதியில், எப்போதாவது தென்படும் இந்த சூரிய மீனை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள், ஆய்வு செய்தும் சென்றுள்ளனர்.
Also Read | அயோத்தி நதியில் கணவன் - மனைவி இடையே நடந்த சம்பவம்.. ரவுண்டு கட்டிய பக்தர்கள்.. சர்ச்சையை உண்டு பண்ண வீடியோ
மற்ற செய்திகள்