அடேய்...! 'உங்ககிட்ட போய் வந்து சேர்ந்தேன் பாரு...' 'அப்படின்னு கொரோனாவே நினைக்குற அளவுக்கு...' - வைரலாகும் 'வேற லெவல்' திருமண போஸ்டர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராமநாதபுரம் மாவட்டம் முள்ளுவாடியில் ஒட்டப்பட்டுள்ள திருமண போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடேய்...! 'உங்ககிட்ட போய் வந்து சேர்ந்தேன் பாரு...' 'அப்படின்னு கொரோனாவே நினைக்குற அளவுக்கு...' - வைரலாகும் 'வேற லெவல்' திருமண போஸ்டர்...!

கொரோனா வைரஸை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அந்த திருமண போஸ்டரில், மணமகனான ஆசிரியருக்குத் தொற்று உறுதியாகி இருப்பதாகவும் அவரை மணமகள் தொற்றிக் கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு ஒருபடி மேல் சென்று இந்த போஸ்டருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நண்பர்களின் பெயர் தான் அட்டகாசம். அதில் சானிடைசர் சபரி, விலகியிரு விக்னேஷ், இருமல் இளங்கோ, மூச்சுத்திணறல் முத்து என போஸ்டரில் வாழ்த்து தெரிவிப்பவர்களின்  பெயரும் வித்தியாசமாக இருக்கிறது.

”நண்பா நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல, உன் மனைவியுடன்” என்று அந்த போஸ்டரில் ஒரு வாசகமும் எழுதப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்