'கட்சி' பெயர் மற்றும் 'சின்னம்' குறித்து பரவிய 'செய்தி'!!... 'உண்மை' நிலவரம் என்ன??... 'ரஜினி' மக்கள் மன்றம் வெளியிட்ட 'அறிக்கை'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த விவரங்களை டிசம்பர் மாத இறுதியில் அறிவிப்பதாக கூறியிருந்தார்.

'கட்சி' பெயர் மற்றும் 'சின்னம்' குறித்து பரவிய 'செய்தி'!!... 'உண்மை' நிலவரம் என்ன??... 'ரஜினி' மக்கள் மன்றம் வெளியிட்ட 'அறிக்கை'!!!

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் பெயர் 'மக்கள் சேவை கட்சி' என்றும், அந்த பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. அது மட்டுமில்லாமல், ரஜினிகாந்தின் மக்கள் சேவை கட்சிக்கு 'ஆட்டோ' சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ரஜினி சார்பில் பாபா சின்னம் ஒதுக்க வேண்டி கோரிக்கை வைத்ததாகவும், அனால் தேர்தல் ஆணையம் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, கட்சியின் பெயர் குறித்து தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருக்க வேண்டும் என ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனால் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்த உண்மை தகவல் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வரும் வரை காத்திருக்கலாம் என ரஜினி ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்