"உங்களை அரியணையில் ஏற்றாமல் போவதுதான் ஒரே வருத்தம்" - கொரோனாவின் கோரப்பிடியில் ரசிகர். "ஒன்னும் ஆகாது கண்ணா.. தைரியமா இரு!" - நெகிழவைத்த ரஜினியின் ஆடியோ!.. கடைசியில் நடந்த மேஜிக்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரஜினியின் ‘பிரார்த்தனை’ ஆடியோவைக் கேட்ட சிறிது நேரத்தில் கரோனா நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவில் உறுதியானதாகவும், உடல்நலம் சரியாகி கண்டிப்பாக தலைவரைச் சந்திப்பேன் என்றும் ரஜினி ரசிகர் முரளி குறிப்பிட்டுள்ளார்.

"உங்களை அரியணையில் ஏற்றாமல் போவதுதான் ஒரே வருத்தம்" - கொரோனாவின் கோரப்பிடியில் ரசிகர். "ஒன்னும் ஆகாது கண்ணா.. தைரியமா இரு!" - நெகிழவைத்த ரஜினியின் ஆடியோ!.. கடைசியில் நடந்த மேஜிக்!

ரஜினி ரசிகர் முரளிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும், அத்துடன் அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பதால் அவரது உடல்நிலை மோசமான நிலையை அடைந்ததாலும், இனி தான் பிழைக்கப் போவதில்லை என கருதிய முரளி, 2021 தேர்தலில் ரஜினி வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவராகவும் தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீரநடை போட்டு, அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானத்தை 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றும் ரஜினியை அரியணையில் ஏற்றப் பாடு படாமல் போவதுதான் ஒரே வருத்தம் என்றும் நேற்று முன்தினம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனை பலரும் பகிர்ந்துவந்த நிலையில், இதுபற்றி நெருகமானவர்கள் மூலமாக அறிந்த ரஜினி, உடனடியாக முரளிக்கு ஆடியோ ஒன்றை அனுப்பினார்.  அதில், "முரளி,  ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா. தைரியமாக இருங்க. நான் உங்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமாவீர்கள். குணமானதும் குடும்பத்துடன், ப்ளீஸ் என் வீட்டுக்கு வாங்க. நான் உங்களை சந்திக்கிறேன். தைரியமாக இருங்க. வாழ்க" என்று ரஜினி பேசியிருந்தார்.

இந்த ஆடியோவை கேட்ட முரளி, “என் பெயர் முரளி. மும்பையில் குடும்பத்தினருடன் வசிக்கிறேன். என் மனைவி ப்ரியா, மகன்கள் தர்ஷன் மற்றும் தருண். தமிழ்நாட்டில் இருந்த என் பெற்றோர் 2 மாதங்களுக்கு முன்பு காலமானார்கள். என் தந்தை கொரோனாவால் மறைந்தார். விவரம் தெரிந்த நாள் முதல் இப்போதுவரை சென்னையில் ரஜினி படம் முதல் நாள் முதல் ஷோவை தவறவிட்டதே இல்லை. இந்நிலையில்தான் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். உடன் சிறுநீரகப்பிரச்சனையும் சேர்ந்து இருக்கிறது.

இனி பிழைக்கவே மாட்டோம் என்றுதான் தலைவர் ரஜினிக்காக அந்த ட்வீட்டை பதிவிட்டேன். ஆனால் அது ரசிகர்கள் மூலம் தலைவரை அடைந்தது. அவர் உடனே எனக்காக ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவை கேட்டபோது என்னையே நான் மறந்தேன். கடவுளுக்கு முன்பு அமர்ந்து தியானம் பண்ணும்போது உருவாவது போன்றதொரு பாசிட்டிவ் எண்ணத்தை அதிகப்படுத்தியது.  தலைவர் பேசியதை கேட்ட சிறிது நேரத்தில் எனது அடுத்த கரோனா தொற்று ரிசல்ட்  நெகட்டிவ் என வந்ததுதான் கூடுதல் ஆச்சரியம், தலைவர் பேச்சால் கொரோனா நெகடிவ் ஆனது போல் தலைவர் ரசிகர்களின் பிரார்த்தனையால் கிட்னி பிரச்சனையில் இருந்தும் மீண்டு கண்டிபாக தலைவரை சந்திப்பேன்!” என்று கூறியதாக இந்து தமிழ் நாளிதழில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மற்ற செய்திகள்