"8 வயசுல இப்டி ஒரு உலக சாதனையா?".. வேற லெவலில் கெத்து காட்டிய தமிழ்நாட்டு சிறுவன்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளது தொடர்பான செய்தி, தற்போது பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். தற்காப்பு கலை பயிற்சியாளராக இருந்து வரும் இவர், 8 வயது சிறுவன் ரட்டன் ஜெய் ராஜாவுக்கும் தற்காப்பு பயிற்சி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில், சிறுவன் ராஜா இதற்கு முன்பாக 4,163 முறை பாக்சிங் பகலையில் குத்திய படி பின்னோக்கி 2.7 கிலோமீட்டர் நடந்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட் சாதனை நிகழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில், தான் செய்த சாதனையை முறியடிக்கும் விதமாக நோபில் உலக சாதனை முயற்சியில் சிறுவன் ரட்டன் ஜெய் ராஜா ஈடுபட்டிருந்தார். அதாவது அதே பாக்சிங் பலகையில் குத்தியவாறு 5 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி நடக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார். இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சிறுவன் ராஜா நடந்த சமயத்தில் மழை குறுக்கிட்டதாக கூறப்படுகிறது. இருந்த போதும் தனது முயற்சியை கைவிடாமல் சுமார் 1.04 மணி நேரத்தில் 5 கிலோமீட்டர் தூரம் பின்னோக்கி நடந்து தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.
அதே போல, 5 கிலோமீட்டர் பின்னோக்கி நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாக்சிங் பலகையில் சுமார் 8,130 முறை குத்தி உள்ளதாக நோபில் உலக சாதனை அமைப்பின் தீர்ப்பாளர்கள் பரிசு வழங்கும் மேடையில் அறிவித்துள்ளனர்.
சிறுவனுக்கு மதுரை மாவட்டம் எஸ். பி. சிவபிரசாத், ஆசியா புக் ஆப் ரெக்கார்டஸ் மற்றும் சாதனைக்கான நோபில் உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி இருந்தார்.
மற்ற செய்திகள்