தமிழகத்தில் ‘திடீர்’ மழைக்கு காரணம் என்ன?.. சென்னைக்கு மழை இருக்கா..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் திடீர் மழைக்கான காரணம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ‘திடீர்’ மழைக்கு காரணம் என்ன?.. சென்னைக்கு மழை இருக்கா..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இதுகுறித்து கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன், ‘வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 21, 22 ஆகிய இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Rain expected in Three districts, Chennai Meteorological dept

பிப்ரவரி 23, 24-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

Rain expected in Three districts, Chennai Meteorological dept

மேலும், காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருவதாகவும், கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்