'ராகுலிடம் இருந்து வந்த போன் கால்'... 'அந்த சர்ப்ரைஸ் முடிவதற்குள், ராகுலிடம் இருந்து வந்த கொரியர்'... திக்குமுக்காடிப்போன சிறுவன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தான் சொன்னதை நிறைவேற்றி நாகர்கோவில் சிறுவனுக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

'ராகுலிடம் இருந்து வந்த போன் கால்'... 'அந்த சர்ப்ரைஸ் முடிவதற்குள், ராகுலிடம் இருந்து வந்த கொரியர்'... திக்குமுக்காடிப்போன சிறுவன்!

தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் செல்லும் வழியில் பாரைக்கோடு என்ற இடத்தில் 4ம் வகுப்பு பயிலும் அந்தோனி ஃபெலிக்ஸ் என்ற மாணவரைப் பார்த்தார்.

உடனே தனது அணிவகுப்பு வாகனங்களை நிறுத்திய ராகுல் காந்தி கீழ் இறங்கிச் சென்று சிறுவனைச் சந்தித்துப் பேசினார். பின்னர் அருகில் இருக்கும் டீ கடை ஒன்றில் சிறுவனுடன் ராகுல் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அந்த நேரம் சிறுவன் தான் ஒரு ஓட்டப்பந்தைய வீரர் என ராகுலிடம் கூறினார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ராகுல், தனது சிறு வயது நினைவுகளை அசைபோட்டபடி சிறுவனிடம் பேசி விட்டு, அவனுக்கு சில டிப்ஸ்களை வழங்கினார்.

Rahul Gandhi ifts sports shoes to Kanyakumari boy

இதனிடையே ஓட்டப்பந்தைய வீரரான அந்த சிறுவனிடம் முறையான ஸ்போர்ட்ஸ் ஷூ இல்லாதது குறித்து ராகுலுக்கு தெரிய வந்தது. 3 நாட்களுக்கு முன்னர் ராகுலின் அலுவலகத்திலிருந்து சிறுவனின் தந்தைக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. சிறுவனின் கால் பாதம் அளவை தெரிந்து சொல்லுமாறு கேட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று சிறுவன் ஃபெலிக்ஸிற்கு புதிய ஷூ ஒன்றை ராகுல் காந்தி கொரியரில் அனுப்பி வைத்தார். இதைச் சற்றும் எதிர்பார்த்த அந்த குடும்பம் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனது.

Rahul Gandhi ifts sports shoes to Kanyakumari boy

இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குச் சிறுவன் ஃபெலிக்ஸ் அளித்துள்ள பேட்டியில், ''நேற்று தனக்கு 5900 ரூபாய் மதிப்பிலான புதிய ஷூவை ராகுல் அனுப்பியதாகவும், அதன் பின்னர் நேற்றிரவு ராகுல் தன்னை தொடர்பு கொண்டு புதிய ஷூ பிடித்திருக்கிறதா, அளவு சரியாக இருக்கிறதா என்றும் கேட்டதாகத் தெரிவித்தார். மேலும் ஓட்டப்பந்தயத்தில் சிறப்பாக வரவேண்டும் என்றும் தன்னுடன் தொடர்பில் இருக்குமாறும் தெரிவித்ததாக ஃபெலிக்ஸ்'' கூறியுள்ளார்.

Rahul Gandhi ifts sports shoes to Kanyakumari boy

மற்ற செய்திகள்