"நாங்க கேட்ட உதவிய செஞ்சிருக்காரு.." ஜிகர்தண்டா டபுள் X படப்பிடிப்பில் நெகிழ்ச்சி.. லாரன்ஸ்க்கு நன்றி சொன்ன மலை கிராம மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "ஆந்திர மாநிலத்தின் தலைநகர் இனி இதுதான்".. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு..!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், அதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரப்பூர்வமாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார்.
இந்த படத்திற்கு "ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ்" என தலைப்பிட்டு படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன.
Images are subject to © copyright to their respective owners.
இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC ஒளிப்பதிவு செய்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 12 முதல் மதுரையில் துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மலை பகுதியில் உள்ள தாண்டிக்குடி கிராமத்தில் நடந்தது. இந்த படப்பிடிப்பில் வயதான கிராம மக்களுக்கு தலா 100 பட்டு வேட்டி & சேலைகள் ராகவா லாரன்ஸ் சார்பில் வழங்கப்பட்டது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும் அந்த கிராமத்தில் சமுதாய கூடம் அமைக்க 1 லட்ச ரூபாய் ராகவா லாரன்ஸால் வழங்கப்பட்டது. மேரி என்ற முதியோருக்கு கண் அறுவை சிகிச்சை ராகவா லாரன்ஸ் மூலம் அளிக்கப்பட்டது. இதற்கு அந்த கிராம மக்கள் நடிகர் ராகவா லாரன்ஸூக்கு நன்றி தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மற்ற செய்திகள்