உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா??.... இதே அந்த 'ஐபிஎல்' டீம் பத்தி 'கேள்வி' கேக்க முடியுமா??... '800' பட சர்ச்சையால் கொதித்தெழுந்த 'ராதிகா' சரத்குமார்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான '800' என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வ தகவல்கள் வெளியானது.

உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா??.... இதே அந்த 'ஐபிஎல்' டீம் பத்தி 'கேள்வி' கேக்க முடியுமா??... '800' பட சர்ச்சையால் கொதித்தெழுந்த 'ராதிகா' சரத்குமார்...

இந்நிலையில், முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என கடுமையான எதிர்ப்பு உருவானது. பல அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலர், விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். 

இதனிடையே, 800 படத்திற்கும், நடிகர் விஜய் சேதுபதிக்கும் எதிராக எதிர்ப்புக் குரல்கள் விடுத்துள்ள அனைவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் ராதிகா வெளியிட்டுள்ளார். 

 

அதில், 'முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என கூறிக் கொண்டு திரிபவர்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லையா?. அரசியல் பின்புலம் கொண்ட ஒரு தமிழரின் ஐபிஎல் அணியான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் செயல்பட்டு வருகிறார். அதனை கேள்வி கேட்கலாமே. அதனை விட்டு விட்டு நடிகரான விஜய் சேதுபதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்காதீர்கள். கிரிக்கெட் மற்றும் விஜய் சேதுபதியிடம் முட்டாள்தனங்களை திணிக்காதீர்கள்' என குறிப்பிட்டுள்ளார். 

 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கலாநிதி மாறனுடையது. இதனால் சன் டிவி குழுமத்தை ராதிகா குறிப்பிட்டதாக கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கு விளக்கமளிக்கும் வகையில் வேறு சில டிவீட்களையும் ராதிகா செய்திருந்தார். அதில், 'சன் ரைசர்ஸ், சன் டிவி உரிமையாளர்களுக்கு அரசியல் பின்புலம் உண்டு என்றாலும் கூட இத்தனை ஆண்டுகள் அவர்கள் அரசியல், விளையாட்டு என அனைத்திலும் அதற்கே உரிய மரியாதையுடன் கையாண்டனர். அதே போல், ஏன் நமது சினிமா துறையில் கையாள முடியவில்லை. கலையை அரசியல் பார்வை இல்லாமல் பார்க்கலாமே. 

 

'நான் இந்த ட்வீட்டை பதிவு செய்ய காரணம் விவாதங்களுக்கு வழி வகுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. திரைப்பட துறையில் உள்ள கலைஞர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்காக தான் சன் ரைசர்ஸ் பெயரை ஒரு சாட்சியாக  பயன்படுத்தினேன்' என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்