அடேங்கப்பா...! 'இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...' கொஞ்சம் விட்ருந்தா... ' என்னடா இங்க இருந்த 'டவர' காணோம்னு கேட்க வச்சுருப்பாங்க...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

13 ஆண்டுகளாக கேட்ப்பாரற்று கிடந்த செல்போன் டவரை மூன்று நாட்கள் தங்கி கொள்ளையடிக்க முயன்ற திருடர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர் புதுக்கோட்டை போலீசார்.

அடேங்கப்பா...! 'இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...' கொஞ்சம் விட்ருந்தா... ' என்னடா இங்க இருந்த 'டவர' காணோம்னு கேட்க வச்சுருப்பாங்க...!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதி அருகே இருக்கும் மறவாமதுரை கிராமத்தில், கடந்த 13 ஆண்டுகளாக தனியார் நிறுவன செல்போன் டவர் பயன்பாடின்றி இருந்து வந்ததுள்ளது.

இதை அறிந்த 3 பேர் கொண்ட மர்ம கொள்ளையர்கள் பல நாட்கள் திட்டம் போட்டு, செல்போன் டவரை முழுவதுமாக கொள்ளையடிக்க முடிவு செய்ததுள்ளனர். மேலும் 3 பேரும் கொள்ளையடிக்க சென்ற செல்போன் டவரிலே தங்கி,  அங்கிருந்த கம்பிகள் மற்றும் பிற உபகரணங்களை மூன்று நாட்களாக அங்கேயே தங்கியிருந்து கழற்றியுள்ளனர்.

மேலும் டவரின் உச்சியில் இருக்கும் தானியங்கி அறையில் இருந்த இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டரையும் திருடிக் கொண்டு லாரியில் ஏற்றியுள்ளனர். இதைக் கண்ட அந்த நிலத்தின் சொந்தக்காரர், இவர்கள் தனியார் செல்போன் டவரின் வேலையாட்கள் என நினைத்து பேச்சுக் கொடுத்துள்ளார். ஆனால் திருடர்கள் மூவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதில் கொள்ளையர்கள் மூவரும், செல்போன் டவரை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

அதையடுத்து நிலத்தின் சொந்தக்காரர் அளித்த புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், செல்போன் டவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும், திருட்டிற்கு பயன்படுத்திய 2 லாரிகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மற்ற செய்திகள்