'எங்க இருந்து வருதுன்னே தெரியலையே...' கடலில் மிதந்து வந்த 'மர்ம' மூட்டைகள்...! - 'பிரித்து பார்த்தபோது, அதில்...' - காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தெற்கு புதுக்குடி மற்றும் வடக்கு புதுக்குடி அருகே கடல் பகுதியில் மிதந்து வந்த கஞ்சா மூட்டைகளை அங்குள்ள மீனவ மக்கள் கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரை பகுதியான புதுக்குடி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகன், தனக்கு சொந்தமான பைபர் படகில் மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது கடலின் மேல்பகுதியில் சணல் சாக்கு மூட்டை மிதந்து வந்துள்ளது. அதைக்கண்ட பாலமுருகன் மற்றும் உடன் இருந்த மீனவர்கள் மூட்டையை மீட்டு கரைக்கு கொண்டு வந்து, கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் முத்துக்கண்ணு, சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது. மேலும் அதிகாரிகள் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது உள்ளே 14 கஞ்சா பண்டல்கள் இருந்ததுள்ளது.
மேலும் வடக்கு புதுக்குடி கிராமத்திலிருந்து ஆரியசாமி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது கிடைத்த மூட்டையிலும் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது.
ஒரே நாளில் இரண்டு பகுதிகளில் கிடைத்த கஞ்சா பொட்டலங்களின் மொத்த எடை 56 கிலோ என போலீசார் தெரிவித்தனர். மேலும்இந்த சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் முத்துக்கண்ணு விசாரணை மேற்கொண்டு சிவகங்கை மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமலதாவிடம் மீட்கப்பட்ட கஞ்சா ஒப்படைக்கப்பட்டது.
மற்ற செய்திகள்