எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்...? 'பேசாம இத பண்ணிடுவோம்...' 'நிவர் புயல் பயத்தில்...' - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயி செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் உருவாகியுள்ள நிவர் புயல் அச்சத்தால் புதுக்கோட்டையை சேர்ந்த விவசாயி தன் வீட்டு ஓடுகளை பிரித்து தரையில் அடுக்கி வைத்த நிகழ்வு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. மேலும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, நிவர் புயல் நாளை கரையை கடக்கும் எனவும், அந்நேரம் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், அதிவேகத்தில் புயல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பொதுமக்களுக்கு புயல் குறித்து பல்வேறு எச்சரிக்கைவிடுத்தும், பாதுகாப்பு அறிவுரைகளையும் கூறிவருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள நகரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்ற விவசாயி நிவர் புயல் அச்சத்தின் காரணமாக தனது வீட்டில் மேல் இருந்த ஓடுகளை ஆட்களை வைத்து பிரித்து தரையில் அடுக்கி வைத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டையில் இதற்கு முன் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பால் 9 பேர் உயிரிழந்ததோடு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அது மட்டுமின்றி பல லட்சக்கணக்கான மரங்கள் காற்றின் வேகத்தில் வேரோடு மண்ணில் சாய்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
பல பகுதிகளில் வீட்டில் அருகே உள்ள மரக் கிளைகளை வெட்டும் பணியிலும், காற்றின் வேகத்தில் சாயும் மரங்களையும் வெட்ட வேண்டிய சூழலிலும், கீற்றுக் கொட்டகை வீடுகளின் மேல் தார் பாய்களை அமைக்கும் பணியிலும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்