‘தோட்டத்தில் தங்கியிருந்த 3 பேர் யார்?’.. புதுக்கோட்டை தொழிலதிபர் மரண வழக்கில் அதிரடி திருப்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் மரண வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள ஆவுடையார்பட்டிணத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் நிஜாம். இவரது மனைவி ஆயிஷா பீபி. நேற்று முன்தினம் இரவு தொழுகையை முடித்துவிட்டு வீட்டில் உள்ள வராண்டாவில் அமர்ந்து நிஜாம் செல்போன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் நிஜாமை ஆயுதங்களால் தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த 170 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில் படுகாமடைந்த நிஜாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அடுத்து திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நகைக்காக நடந்ததா? அல்லது தொழில் போட்டி காரணமாக நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முக்கிய திருப்பமாக உயிரிழந்த தொழிலதிபர் நிஜாமின் தோட்டத்தில், கடந்த 15 நாட்களுக்கு முன் ஒரு ஆண் மற்றும் பெண் வெளியூரில் இருந்துவந்து தங்கி வேலைக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. அப்போது அவர்களுடன் அடையாளம் தெரியாத மற்றொரு நபரும் தங்கி இருந்தது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் மூவரும் யார்? ஏன் அவர்களை நிஜாம் தனது தோட்டத்தில் தங்க வைத்தார்? என்பது குறித்து அவரது மனைவி ஆயிஷா பீபியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவரது தோட்டத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் மாசிலாமணி என்பவரின் குடும்பத்தினரிடமும், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தோட்டத்தில் தங்கியிருந்த மூவரின் புகைப்படம் மற்றும் அடையாளங்களின் அடிப்படையில் அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/
மற்ற செய்திகள்