கர்ப்பிணி மனைவியை காணவில்லை.. புகாரளித்த கணவர்.. போன் சிக்னல் கோயம்பத்தூர்'ல இருக்கு.. கிளைமேக்சில் செம ட்விஸ்ட்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயம்பத்தூர் : பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவி காணவில்லை என கணவர் ஒருவர் புகாரளித்த நிலையில், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், கடந்த 2 தினங்களுக்கு முன், தன்னுடைய கர்ப்பிணி மனைவியை, ஒருவர் அழைத்து வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு வார்டும் ஒதுக்கி, அதில் அவர் தங்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தான் திடீரென கர்ப்பிணி பெண் காணாமல் போயுள்ளார். இதன் காரணமாக, பதற்றம் அடைந்த பெண்ணின் கணவர், தன்னுடைய மனைவியை மருத்துவமனையை சுற்றி தேடி பார்த்துள்ளார். ஆனால், எங்கேயும் மனைவி கிடைக்கவில்லை. இதனால் பதறிப் போன கணவர், கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
கடத்தல்
தொடர்ந்து, போலீசாரும் கர்ப்பிணி பெண்ணின் தொலைபேசி எண்ணைக் கொண்டு, விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அப்போது, பெண்ணின் செல்போன் சிக்னல், விழுப்புரம் பகுதியில் காட்டியுள்ளது. இதனிடையே, அந்த பெண் நேற்று காலை, உறவினர் ஒருவருக்கு அழைத்து, தன்னை யாரோ கடத்திக் கொண்டு போய், ஆபரேஷன் செய்து, வயற்றில் இருந்த இரட்டைக் குழந்தையையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாக கூறியுள்ளார். மேலும், தன்னை ஒரு இடத்தில் தங்க வைத்து விட்டு, அவர்கள் தப்பித்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அழைத்து வந்து விசாரணை
அழைப்பு வந்ததன் பெயரில், பெண்ணின் மொபைல் எண்ணை வைத்து, கோயம்பத்தூரில் இருந்து அவர் பேசியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து, அங்குள்ள மகளிர் போலீசார் உதவியுடன் அப்பெண்ணை மீட்டு, போலீஸ் நிலையமும் அழைத்து வந்துள்ளனர்.
அதிர்ச்சி தகவல்
அதன் பிறகு, போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பெண்ணுக்கும், தர்மபுரியைச் சேர்ந்த போலீஸ் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், தன்னுடைய மனைவி, கர்ப்பம் அடைந்ததாகவும், இரட்டைக் குழந்தைகள் உள்ளதாகவும் உறவினர்களிடமும் தெரிவித்துள்ளார்.
பிரசவம்
அது மட்டுமில்லாமல், மனைவிக்கு 7 ஆவது மாதம், 9 ஆவது மாதம் வளைகாப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம், அந்த பெண்ணிற்கு குழந்தை பிறக்கும் என கூறப்பட்ட நிலையில், பிரசவம் தள்ளிப் போவதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். இதன் பெயரில் சந்தேகம் அடைந்த அவர்கள், மருத்துவமனையில் பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
உறவினர்கள் ஏமாற்றம்
அதன்படி, கணவன் மனைவி ஆகியோர் மருத்துவமனை சென்ற நிலையில், அங்கிருந்து தப்பித்த பெண், பஸ் ஏறி விழுப்புரம், கோயம்பத்தூர் சென்றுள்ளார். பிறகு, அங்கு வைத்து அவரை பிடித்து விசாரித்த போது தான், அவர் கர்ப்பம் ஆகவில்லை என்பது தெரிய வந்தது. கர்ப்பம் அடைந்ததாக பொய் கூறி, உறவினர்களை ஏமாற்றி வந்ததும் தெரிய வந்தது.
கடத்தல் நாடகம்
அந்த பெண் குண்டாக இருந்ததால், குடும்பத்தினரும் நம்பியுள்ள நிலையில், கடைசியில் விஷயம் தெரிந்து விடும் என்பதால், தன்னை கடத்தியதாக பெண் நாடகம் ஆடியதும் விசாரணையில் உறுதியானது. கர்ப்பிணி பெண் என்ற போர்வையில், கடந்த பல மாதங்களாக, தனது குடும்பத்தையே, தனது கணவருடன் இணைந்து ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்