புதுச்சேரி : கதறி அழுத பாகன் சக்திவேல்.. இறக்கும் முன் பாசத்தை காட்டிய லட்சுமி யானை ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரபலமான புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் ஓய்வில் இருந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து இன்று காலை மரணம் அடைந்தது.  கடந்த 1996ம் ஆண்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு, தமது ஐந்து வயதில் அழைத்துவரப்பட்ட இந்த லட்சுமி யானை புதுச்சேரி பக்தர்களுக்கு பரீச்சயமாகவும் பிடித்தமான யானையாகவும் இருந்து வந்துள்ளது.  இதனிடையே அண்மை காலமாக கோயில் வளாகத்தில் லட்சுமி யானை  ஓய்வெடுத்து வந்துள்ளது.

புதுச்சேரி : கதறி அழுத பாகன் சக்திவேல்.. இறக்கும் முன் பாசத்தை காட்டிய லட்சுமி யானை ..!

Also Read | நடைப்பயிற்சியில் திடீரென மயங்கி விழுந்து மணக்குள விநாயகர் கோயில் யானை மரணம்.. கதறி அழுத பக்தர்கள்!

இது தவிர நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் லட்சுமி யானை இன்று காலை நடைப்பயிற்சியின் போது கல்வே கல்லூரி அருகே சென்றிருக்கிறது. அங்குதான்  லட்சுமி யானை மயங்கி விழுந்தது. அங்கேயே வைத்து பலரும் லட்சுமி யானைக்கு முதலுதவி செய்து பார்த்தனர். ஆனால் எதற்கும் பலனின்றி லட்சுமி யானை பரிதாபமாக உயிரிழந்தது.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் லட்சுமி யானையிடம் ஆசீர்வாதம் பெறுவது வழக்கம். இந்நிலையில்தான் உடல்நலம் கருதி வனத்துறை அறிவுறுத்தல்படி லட்சுமி யானை வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருக்கும் கொட்டிலில் 15 நாட்கள் ஓய்வெடுத்து வந்தது. இந்த ஓய்வு காலத்தில் யானை லட்சுமி கோயிலுக்கு வரவில்லை. பார்வையாளர்களும் யானையை பார்க்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

puducherry vinayakar temple elephant and caretaker bonding

தவிர பழ வகைகளை தவிர்த்து களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் லட்சுமிக்கு வழங்கப்பட்டு வந்தன.  இன்று காலை லட்சுமி யானை ஈஸ்வரன் கோயிலில் இருந்து நடை பயணம் சென்றபோது மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் யானையை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். அதன் பின்னர் பக்தர்களின் அஞ்சலிக்காக யானை வைக்கப்பட்டது. பக்தர்கள் யானையை தொட்டு கும்பிட்டு சென்றனர்.  புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதுவை முன்னாள் முதல்வர்  நாரயணசாமி உள்ளிட்டோரும் யானையை நேரில் வந்து கண்டு அஞ்சலி செலுத்தினர்.

puducherry vinayakar temple elephant and caretaker bonding

இந்த நிலையில் லட்சுமி யானை இறப்பதற்கு முன்பாக பாகன் சக்திவேலை பிடித்து இழுத்து அவருடன் பாசப்பிணைப்பை காட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. எப்போது எடுத்தது என தெரியவராத இந்த வீடியோவில் லட்சுமி யானையை கடந்து செல்லும் பாகன் சக்திவேலை தன் தும்பிக்கை கொண்டு பிடித்து இழுக்கும் லட்சுமி யானை தன் பாசத்தை காட்டுகிறது. அவரும் பதிலுக்கு தன் பாசத்தை காட்டி அதை தடவி கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்கிறார்.

puducherry vinayakar temple elephant and caretaker bonding

இதை பார்க்கும் ரசிகர்கள் உருகிப்போய் வருகின்றனர். யானை லட்சுமியின் இறுதிச் சடங்கில் பாகன் சக்திவேல் கதறி அழுதது பலரையும் உருக்கியுள்ளது.

Also Read | மணக்குள விநாயகர் கோயில் யானை மரணம்.. நெகிழ்ச்சியான அறிக்கை வெளியிட்டு அஞ்சலி செலுத்திய அண்ணாமலை!

PUDUCHERRY, VINAYAKAR TEMPLE, PUDUCHERRY VINAYAKAR TEMPLE ELEPHANT, CARETAKER, ELEPHANT CARETAKER

மற்ற செய்திகள்