“விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலை விவகாரம்!” - கொலையாளியின் ‘பகீர்’ வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரியைச் சேர்ந்த 36 வயது பெயிண்டர் வேலை செய்து வந்த மணிகண்டன் என்பவர், விஜய் சேதுபதியின் ரசிகர் தலைமை மன்ற தலைவராகவும் உள்ளார்.

“விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலை விவகாரம்!” - கொலையாளியின் ‘பகீர்’ வாக்குமூலம்!

இவருக்கு விஜயகுமாரி என்கிற மனைவியும் 4 வயதில் ஒரு மகனும், 1 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில், கடந்த 4-ம் தேதி இரவு ரெட்டியார்பாளையத்தில் உள்ள அவரது  மாமியார்  வீட்டிற்கு போகும் வழியில் நெல்லித்தோப்பு மீன் அங்காடி அருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்  உருளையன்பேட்டை போலீசார் செய்த முதற்கட்ட விசாரணையில் மணிகண்டனின் உறவினர் ராஜசேகர்தான் இந்த கொலையை செய்துள்ளார் என தெரியவந்தது. 

விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற செயலாளராக இருந்த மணிகண்டனை சில மாதங்களுக்கு முன் தலைவர் பதவியை விட்டுத்தரும்படி ராஜ்சேகர் தகராறு செய்துள்ளார்.  அத்துடன் தனது ஊரான ஆட்டுப்பட்டி பகுதியில் ராஜசேகர் போட்டிக்காக நடத்திவந்த ரசிகர் மன்ற செயலாளர் பதவியில் இருந்தும் ராஜசேகர் நீக்கப்பட்டார்.

இதனால் ஆத்திரத்தில் ராஜசேகர் மணிகண்டனை பின் தொடர்ந்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ராஜசேகருக்கு உடந்தையாக சுனில், சந்தோஷ், மாறன், ஜான்சன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ரசிகர் மன்றத்தின் தலைவர் பதவிக்காக ஆசைப்பட்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து மணிகண்டனை கொன்றதாக ராஜசேகர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

முன்னதாக ஒரு கொலை வழக்கின் சாட்சியாக மணிகண்டனை இருந்ததால், அவரை விஷம் வைத்துக் கொல்ல ஒரு கும்பல் முயன்றதாகவும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ததாகவும் தெரிகிறது. இதனால் அவர் சிறிய இயந்திரம் மூலமே பேச முடியும் என்கிற சூழலில் இருந்த மணிகண்டன், குணமடைந்ததும், அவர் நடிகர் விஜய் சேதுபதியை சில மாதங்ளுக்கு முன் சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்