"மகளிர் மட்டும்".. பிங்க் நிறத்தில் பெட்ரோல் பங்க்.. முதல் நாளில் இலவச பெட்ரோல்!!.. பட்டையை கிளப்பும் திட்டம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெண்களுக்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெடுப்பு தொடர்பான செய்தி, தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க்குகளில், அனைத்து இடத்தை போல ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒரே வரிசையில் நின்று பெட்ரோல் போட்டு வருகின்றனர்.
அப்படி இருக்கையில், வேலைக்கு செல்லும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து பெட்ரோல் போடுவதால் சிரமத்திற்கும் அவர்கள் ஆளாகி வருவதாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில், தற்போது இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில் புதுச்சேரி லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மகளிருக்கென்று தனியாக பிங்க் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், சிறப்பு விருந்தினராக புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டார். மேலும் பெட்ரோல் பம்பை துவக்கி வைத்து விட்டு பிரேத்தியேகமாக துவக்க நாள் பரிசாக 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக பெட்ரோலும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசும் பெண்கள், நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் போடுவதால் சிரமம் ஏற்படுவதாகவும், தற்போது மகளிர்களுக்கு என்று பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் குறித்து பேசி இருந்த அமைச்சர் சந்திரா ப்ரியங்கா, இது போன்று அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பெண்களுக்கு என்று தனி பெட்ரோல் பங்க் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மற்ற செய்திகள்