'போதையில்' வந்த வாலிபர்கள் செய்த காரியம்.. 'ரயில்வே கேட்டில்' வைத்து.. 'அடித்து வெளுத்த பொதுமக்கள்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரியில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கியதாக போதை ஆசாமிகள் இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

'போதையில்' வந்த வாலிபர்கள் செய்த காரியம்.. 'ரயில்வே கேட்டில்' வைத்து.. 'அடித்து வெளுத்த பொதுமக்கள்!'

புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், பெரம்பை சாலை வழியாக  கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.  இந்நிலையில் நேற்று மாலை 4:15 மணி அளவில், ரயில் கடந்து போகும்போது பொதுமக்கள் குறுக்கே சென்றுவிடக் கூடாது என்று, புதுத்தெரு ரயில்வே கேட்டை கேட் கீப்பர் சகாய தேவராஜ் மூடினார். அந்த சமயத்தில்தான் குடிபோதையில் வந்த 2 நபர்கள், கேட் கீப்பர் சகாய தேவராஜிடம் சண்டையிடத் தொடங்கினர்.

அதன் பின்னர் ரயில் கடந்துபோன பிறகு, அங்கு தனது நண்பர்களுடன் வந்த அந்த போதை நபர்கள் கேட் கீப்பரின் தலையில் தாக்கினர். இதனால் அவரது தலையில் பலத்த காயம் உண்டானது. இதனைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் போதை ஆசாமிகளில் 2 பேரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பின்னர் அவர்களை ரெட்டியார்பாளையம் போலீஸாரிடத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த வாலிபர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள போலீஸார், பாதிக்கப்பட்ட கேட் கீப்பர் சகாய தேவராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

PUDUCHERRY