புதுச்சேரி லட்சுமி யானை நினைவலைகளுக்கு நடுவே வைரலாகும் நெல்லையப்பர் காந்திமதி யானை.!.. சில மாதம் முன்பே பக்தர்கள் செய்த நெகிழ்ச்சி காரியம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
5 வயதில் அந்த கோயிலுக்கு வந்த யானை, 26 ஆண்டுகளாக பாகன் சக்திவேலின் வளர்ப்பில் இருந்து வந்த நிலையில் அண்மை காலமாக ஓய்வெடுத்து வந்தது. இந்நிலையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட லட்சுமி யானை, நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மயங்கி விழுந்து உயிரிழந்தது. புதுச்சேரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின் பக்தர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இறுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த துயரவேளையில் பலரும் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி குறித்து பேசி வருகின்றனர். 13 வயதில் இந்த கோவிலுக்குள் வந்த இந்த யானைக்கு 52+ வயதான நிலையில், 3,4 மாதங்களுக்கு முன்பாக யானை காந்திமதியின் காலில் இருந்த பிரச்சனையை சரி செய்யும் வகையில் பக்தர்கள் ஒன்று கூடி, ரூபாய் 12,000 மதிப்பிலான தோல் செருப்புகளை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
தமிழக திருக்கோயில்களில் முக்கியமான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் எல்லா நடக்கும் ஆனி தேர் திருவிழாவின்போது சுவாமி - அம்பாள் ரத வீதி உலா வரும் போது, யானை காந்திமதி அதற்கு முன்பாக நடந்து செல்வது இங்கு வருடா வருடம் நடக்கும் ஐதீகங்களில் ஒன்று.
அத்தகைய சிறப்புமிக்க காந்திமதி யானையை கடந்த 2017 ஆம் ஆண்டு பரிசோதித்த மருத்துவர்கள், காந்திமதி யானை வயதுக்கு ஏற்ற எடையை விட கூடுதலாக 300 கிலோ உள்ளதாக கூறியதுடன், தினமும் நடைபயிற்சி அழைத்து செல்ல பரிந்துரைத்தனர். தவிர, இனிப்பு நிறைந்த உணவுகளை குய்றைத்து நார்ச்சத்துள்ள உணவுகளையும் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக கடந்த 6 மாதத்தில் காந்திமதி யானை 150 கிலோ எடையை குறைத்தது.
எனினும் வயது முதிர்ச்சி காரணமாக மூட்டு வலிக்கு ஆளான காந்திமதி யானை நடக்கும்போது சிரமப்பட்டதால், மருத்துவ குணம் வாய்ந்த தோல் செருப்புகளை ரூபாய் 12,000 மதிப்பில் செலவு செய்து பக்தர்கள் நன்கொடையாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தனர். இந்த விஷயத்தை பலரும் இப்போது லட்சுமி யானையின் நினைவுகள் தொடர்பாக பேசி வருகின்றனர்.
மற்ற செய்திகள்