16 ஆவது நாள் காரியத்தின் போது.. லட்சுமி யானையின் கால் தடம் தென்பட்டதா?.. பரபரப்பு சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் இறந்த யானை லட்சுமியின் கால் தடம் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

16 ஆவது நாள் காரியத்தின் போது.. லட்சுமி யானையின் கால் தடம் தென்பட்டதா?.. பரபரப்பு சம்பவம்!!

Also Read | நள்ளிரவில்.. வாசலில் தோன்றிய இளம்பெண் உருவம்.. வீடியோவை வாலிபர் பகிர்ந்ததும்.. போனில் பெண் சொன்ன விஷயம்.. கேட்டதும் அள்ளு விட்டுருச்சு!!

புதுவையில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் யானையான லட்சுமி, கடந்த நவம்பர் 30 ஆம் தேதி நடைப்பயிற்சிக்கு சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்தது.

5 வயதில் அந்த கோயிலுக்கு வந்த யானை, 26 ஆண்டுகளாக பாகன் சக்திவேலின் வளர்ப்பில் இருந்து வந்த நிலையில் அண்மை காலமாக ஓய்வெடுத்து வந்தது. இந்நிலையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட லட்சுமி யானை, நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மயங்கி விழுந்து உயிரிழந்தது. புதுச்சேரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின் பக்தர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இறுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Puducherry lakshmi elephant foot prints found reportedly

லட்சுமி யானை புதைக்கப்பட்ட இடத்தில் தினமும் மக்கள் வழிபட்டு செல்கின்றனர். முன்னதாக, லட்சுமி யானை உயிரிழந்த சமயத்தில் அதன் சமாதியில் பாகன் சக்திவேல் கண்ணீர் விட்டு கதறிய விஷயமும் பெற அளவில் அங்கிருந்த மக்களை கண்கலங்க வைத்திருந்தது.

Puducherry lakshmi elephant foot prints found reportedly

இதனைத் தொடர்ந்து, யானை லட்சுமி இறந்து சமீபத்தில் 16 நாட்கள் ஆன நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் ஈஸ்வரன் கோவில் பின்புறம் யானை தங்கி இருந்த இடத்தில், 16 ஆவது நாள் காரியங்கள் நடைபெற்றுள்ளது. இதில் கோவில் நிர்வாகத்தினர், யானை பாகன் மற்றும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

Puducherry lakshmi elephant foot prints found reportedly

இந்த நிலையில், யானை லட்சுமி எப்போது நிற்கும் இடத்தில் யானையின் காலடி அச்சு திடீரென தோன்றி மறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, யானை சாணத்தின் வாசனை அடித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. யானை காலடி அச்சு மற்றும் சாணத்தின் வாசனை உள்ளிட்ட விஷயங்கள், 16 ஆவது நாள் காரியம் செய்யும் போது தென்பட நிலையில், இந்த சம்பவம் அங்கே பரபரப்பை உருவாக்கி உள்ளது.

அதே போல, யானை லட்சுமி காலடி தென்பட்ட இடத்தில் பக்தர்கள் மலர் வைத்து வழிபாடு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

Also Read | "தூங்குறது மகாராஷ்டிரால, சமைக்குறது தெலுங்கானால".. வீட்டின் குறுக்கே செல்லும் மாநில எல்லைகள்!!.. வியக்க வைக்கும் பின்னணி!!

PUDUCHERRY, PUDUCHERRY LAKSHMI ELEPHANT, LAKSHMI ELEPHANT FOOT PRINTS

மற்ற செய்திகள்