'நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி'... 'புதுச்சேரியில் காங்கிரஸ்' அரசு கவிழ்ந்தது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாகச் சபாநாயகர் அறிவித்தார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த நிலையில், நாராயணசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக இன்று புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்து முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது என்றும், ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்வதாகவும் கூறினார். முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்குத் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், நெருக்கடியைக் கடந்தும் ஆட்சியை நிறைவு செய்ததாகவும் கூறினார்.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அரசுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து அரசு பெரும்பான்மையை இழந்ததாகச் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி சட்டசபையை விட்டு வெளியேறினார்.
மற்ற செய்திகள்