'கட்டு கட்டாக 'ஏ.டி.எம் மெஷினில்' இருந்த பணம்'... 'பூட்ட மறந்த ஊழியர்'... இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பி விட்டு அதனை ஊழியர் சரியாகப் பூட்டாமல் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கட்டு கட்டாக 'ஏ.டி.எம் மெஷினில்' இருந்த பணம்'... 'பூட்ட மறந்த ஊழியர்'... இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

புதுச்சேரி முத்திரையர்பாளையம் வழுதாவூர் சாலையில் கனரா வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று இரவு தனியார் நிறுவனம் மூலம் 12 லட்ச ரூபாய் பணம் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம் மையத்திற்குப் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது பணம் வைக்கப்பட்ட இயந்திரம் திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கனரா வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்கள். இதனைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள் வந்து சோதனையிட்டதில் 12 லட்சம் ரூபாய் பாதுகாப்புடன் இருந்தது. இதற்கிடையே பணம் வைக்கப்படும் இயந்திரம் எப்படிப் பூட்டப்படாமல் இருந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

அப்போது பணத்தை நிரப்பி விட்டு ஏ.டி.எம் இயந்திரத்தை ஊழியர் பூட்டியுள்ளார். ஆனால் பூட்டுச் சரியாக மூடாத காரணத்தால், பணம் வைக்கப்பட்ட பகுதி திறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. பின்னர் எலக்ட்ரானிக் லாக்கை மீண்டும் உறுதி செய்து விட்டு அதிகாரிகள் சென்றனர். தக்க நேரத்தில் வாடிக்கையாளர் தகவல் தெரிவித்ததால் 12 லட்ச ரூபாய் தப்பியது. தகவல் தெரிவித்த வாடிக்கையாளரை, வங்கி அதிகாரிகள் உட்பட காவல்துறையினர் வெகுவாக பாராட்டினார்கள்.

ATM, CASH, PUDUCHERRY