'நாளை முதல் அமலாகும் கட்டுப்பாடுகள்'... 'புறநகர் ரெயில்களில் நிலை என்ன'?... தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் 20ந் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்குப் பிறகு அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை முதல் காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணிவரை செயல்பட இந்த கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், வாடகை ஆட்டோக்கள், கார்கள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
அந்தவகையில் சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் 20ந் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. முன் களப்பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்களும் புறநகர் ரெயிலில் பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் துறைமுகப் பணியாளர்கள், ஊடகத் துறையினர், மின்னணு வணிகத்தினர், அரசு, தனியார் வங்கிப்பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அத்தியாவசிய பணியாளர்கள் கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்