'கிருத்திகாவுக்கு ஜாமின்'... 'நீதிமன்றம் சொன்ன காரணம்'... 'ஆனா பப்ஜி மதனுக்கு'?... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பப்ஜி மதனின் மனைவிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

'கிருத்திகாவுக்கு ஜாமின்'... 'நீதிமன்றம் சொன்ன காரணம்'... 'ஆனா பப்ஜி மதனுக்கு'?... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

யூடியூப் தளத்தில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி அதனை நேரலை செய்து வந்தவர் பப்ஜி மதன். இவர் விளையாட்டின் இடையில் பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசி பதிவிட்டு வந்தார். பெண்கள் குறித்து ஆபாசமாகவும், அநாகரீகமான முறையில் பேசி வந்த நிலையில் பப்ஜி மதனைக் கைது செய்ய வேண்டும் என புகார் எழுந்தது.

Pubg Madan wife got bail but court rejects Madans bail petition

அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். நேரில் ஆஜராகாத பப்ஜி மதன் தலைமறைவானார். இதனையடுத்து அவர்மீது சிறுவர்களைத் தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாகப் பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Pubg Madan wife got bail but court rejects Madans bail petition

இந்நிலையில் மதனின் மனைவி கிருத்திகாவை விசாரித்த காவல்துறையினர் மதனுடன் இணைந்து அவரது மனைவியும் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பப்ஜி மதனின் மனைவியை காவல்துறையினர் ஜூன் 16ஆம் தேதி கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நேரலை விளையாட்டின்போது எதிர்த்தரப்பில் மதனுடன் பேசியது அவரது மனைவிதான் என்பது தெரியவந்தது.

Pubg Madan wife got bail but court rejects Madans bail petition

இதையடுத்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதனின் மனைவிக்கு ஜூன் 30 வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் கிருத்திகாவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  8 மாத கைக்குழந்தை இருப்பதால் அவருக்கு ஜாமின் வழங்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் யூடியூபர் மதனின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்