"ஒருத்தரும் தப்பிக்க முடியாது!".. அடுத்த அதிரடி!.. மதன் ரசிகர்களுக்கும் செக்!.. Beast மோடில் சென்னை சைபர்கிரைம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

"ஒருத்தரும் தப்பிக்க முடியாது!".. அடுத்த அதிரடி!.. மதன் ரசிகர்களுக்கும் செக்!.. Beast மோடில் சென்னை சைபர்கிரைம்!

யூடியூப் மூலம் ஆபாச பேச்சுகளால் சிறுவர்களை தவறாக வழி நடத்திய குற்றம் உட்பட பாலியல் புகார், பண மோசடிப் புகார் என ஏராளமான வழக்குகள் குவிந்ததையடுத்து, பப்ஜி மதன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

அதைத் தொடர்ந்து, மதனின் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை சென்னை சைபர்கிரைம் போலீசார் முடக்கினர். ஆனால், மதனுடைய ரசிகர் பட்டாளம் பெரிது என்பதால், அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய தேவையை காவல்துறை உணர்ந்துள்ளது. அதன் விளைவாக, மதனின் முடக்கப்பட்ட யூடியூப் மற்றும் இன்ஸ்டா பக்கங்கள் மூலம் சைபர்கிரைம் போலீசார் முக்கிய அறிவிப்பு ஒன்றை அவரது ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில், "மதனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருக்கும் எல்லோருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாச வார்த்தைகளை பேசி சமூக வலைதளத்தில் பரப்பி வருபவர்களை கண்காணித்து வருகிறோம்.

எல்லோருடைய மெசேஜையும் படித்து வருகிறோம். தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி விளையாடுபவர்களை கண்டறிந்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க உள்ளோம். தடையை மீறி விளையாடுபவர்களின் இல்ல முகவரிக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.

எல்லோரையும் கண்காணித்து வருகிறோம். கவனமாக இருங்கள். மதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதனை பதிவுசெய்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் STATUS-ல் இந்த எச்சரிக்கையை வைத்துள்ளனர்.

pubg madan instagram warning by chennai cyber crime police

முன்னதாக, பப்ஜி மதனுக்கு சொந்தமான Toxic Madan 18+ என்ற யூடியூப் சேனல் மூலம் "பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு, படிப்பில் கவனம் செலுத்துங்கள்" என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்