'ஏன்மா இப்படி மானத்தை வாங்குற'... 'நம்ம கிட்ட இருக்கிறது என்ன கார் தெரியுமா'?... மனைவிக்கு பப்ஜி மதன் சொன்ன அட்வைஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாங்கள் வைத்திருப்பது சொகுசு கார்கள் இல்லை என பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

'ஏன்மா இப்படி மானத்தை வாங்குற'... 'நம்ம கிட்ட இருக்கிறது என்ன கார் தெரியுமா'?... மனைவிக்கு பப்ஜி மதன் சொன்ன அட்வைஸ்!

யூடியூப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதன் கடந்த ஜூன் 18-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் ஜூலை மாதம் 6-ம்தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் பப்ஜி மதனை போலீசார் ஆஜர்படுத்தி உள்ளனர். கிருத்திகாவுடன், பப்ஜி மதனின் பெற்றோரும் அறிவுரை கழக வளாகத்தில் அவரை சந்திக்க வந்தனர்.

Pubg Madan advice his wife that we have only luxury cars

குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அதனை அறிவுரைக்கழகம் உறுதி செய்தல் வேண்டும். அதனடிப்படையில் பப்ஜி மதன் அறிவுரை கழகத்தில் ஆஜராகி தன் மீது போடப்பட்டுள்ள குண்டாஸ் ரத்து செய்ய தன் தரப்பு வாதங்களை முன் வைக்க வேண்டும். இந்த நிலையில் இன்று அவர் ஆஜராகினார். அப்போது அவரது மனைவி கிருத்திகா தனது குழந்தையுடன் சென்று வாதிட்டார்.

அப்போது "தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடவில்லை. சீனா செயலிதான் தடை செய்யப்பட்டுள்ளது. கொரியா வெர்ஷன் ஆன்லைன் விளையாட்டைத் தான் விளையாடிப் பதிவேற்றினோம். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவிற்குத் தவறு செய்யவில்லை. சாதாரண சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா அறிவுரை கழகத்தில் வாதிட்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

Pubg Madan advice his wife that we have only luxury cars

இதையடுத்து தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்த பின்னர் பப்ஜி மதனை சிறையிலடைக்க போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். அந்த நேரத்தில் பப்ஜி மதனும் அவரது மனைவி கிருத்திகாவும் சில மீட்டர் தூரம் தள்ளி இருந்த நிலையில் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.

அப்போது பப்ஜி மதன் தனது மனைவிக்கு "நாம் வைத்திருக்கும் இரண்டு கார்களுமே சொகுசு கார்கள் தான். இனி நம்மிடம் சொகுசு கார் இல்லை என வெளியில் யாரிடமும் கூறாதே எனவும் மேலும், காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள இரண்டு கார்களையும் வழக்கறிஞர்களை வைத்து வெளியே எடுத்து விடு எனவும்" என அறிவுரை கூறினார்.

மற்ற செய்திகள்