ஆஜராக வந்தபோது திடீரென சுருண்டு விழுந்த நிர்மலா தேவி..! நீதிமன்றத்தில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விசாரணைக்காக நீதிமனறத்துக்கு வந்த நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஜராக வந்தபோது திடீரென சுருண்டு விழுந்த நிர்மலா தேவி..! நீதிமன்றத்தில் பரபரப்பு..!

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி தற்போது ஜாமினில் உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணைக்கு இன்று நீதிமன்றத்தில் ஆஜராக நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்துக்கு வந்தனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் பேராசிரியை நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவசாப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து 3 பேரும் வரும் 23 -ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NIRMALADEVI, TAMILNADU, COURT, PROFESSOR