'ஸ்டாலின் குறித்து பிரியா பவானி சங்கர் போட்ட பதிவு'... 'வம்படியாக வந்து கிண்டல் செய்த நெட்டிசன்'... நெத்தியடி பதிலை கொடுத்த பிரியா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ட்விட்டரில் பிரியா பவானி சங்கர் போட்ட பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
தமிழகச் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் திமுக மற்றும் முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 10 வருடங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முதல் முறையாக திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவியில் அமர இருக்கிறார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
சாதாரண தொண்டராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ஸ்டாலின், படிப்படியாக வளர்ந்து இன்று முதல்வர் பதவியைப் பிடித்திருப்பதால், இந்திய அளவில் பல அரசியல் தலைவர்கள் முதல் பல சினிமா பிரபலங்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பத்திரிகையாளராக பணியாற்றி பின்னர் திரைத்துறையில் கால்பதித்த பிரியா பவானி சங்கர் திமுக தலைவர் ஸ்டாலினை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில், ''நீண்ட காலத்துக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.
அதற்கு நெட்டிசன் ஒருவர், ''சகோதரி முதல்வரை நேரடியா மக்கள் தேர்ந்தெடுக்கவே முடியாது... அப்படியே உங்கள் முட்டாள்தனமான வாதப்படி கூட 2016க்கு பிறகு 2021 ல தான தேர்தல் வரும் அது என்ன நீண்ட காலம்..2016 ல ஜெயலலிதா தான் முதல்வர் வேட்பாளர். அப்புறம் முதல்வர் இறந்தால் ஆட்சி கவிழ்க்கனும்னு சட்டமும் கிடையாது'' என ட்வீட் செய்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த பிரியா பவானி சங்கர், ''take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது.6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir.மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை'' என நச்செனப் பதிலடி கொடுத்திருந்தார்.
பிரியா பவானி சங்கர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்ததையடுத்து பலரும் அவரை திமுக ஆதரவாளர் என கமெண்ட் செய்து வந்தனர். அதற்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில் பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது.6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir.மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை https://t.co/qHjzK4tQTu
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 4, 2021
ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி ட்வீட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு strategy இல்ல😎 https://t.co/YfMC8YuZ7M
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 4, 2021
மற்ற செய்திகள்