'டாக்டரின்றி நடந்த பிரசவம்'... 'இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சென்ற இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு, செவிலியர் மருத்துவம் பார்த்ததில் தாயும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'டாக்டரின்றி நடந்த பிரசவம்'... 'இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்'!

நெல்லை மாவட்டம், கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி 25 வயதான அகிலா பிரசவ வலி ஏற்பட்டதால், களக்காடு அருகே திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமையன்று இரவு சேர்க்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பணியில் இருந்த செவிலியர் பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது. அகிலாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

இருப்பினும் பிரசவத்தின்போது ஏற்பட்ட உடல் நல பாதிப்பினால் தாயும், குழந்தையும் உயிரிழந்தது. இந்த தகவல் அறிந்த அகிலாவின் உறவினர்கள் மற்றும் கட்டளை கிராமத்தினர் அங்கு திரண்டனர். 24 மணிநேரமும் செயல்படும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் பிரசவம் நடந்தது குறித்து விசாரித்தனர். தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CARELESS, PREGNANTWOMAN