சென்னை மக்களே...! 'நாளைக்கு (ஜூன்-29) பவர் கட் இருக்கு...' எந்தெந்த ஏரியா...? 'கரெக்ட்டா எத்தனை மணிக்கு போகும் தெரியுமா...? - முழு விவரங்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் நாளைக்கு (29-06-2021) மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளை குறித்து மின்வாரியத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை மக்களே...! 'நாளைக்கு (ஜூன்-29) பவர் கட் இருக்கு...' எந்தெந்த ஏரியா...? 'கரெக்ட்டா எத்தனை மணிக்கு போகும் தெரியுமா...? - முழு விவரங்கள்...!

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக நாளைக்கு (29-06-2021) கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் மதியம் 1 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் மின்வாரியத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்களாவது, பட்டாபிராம் பகுதியான கக்கஞ்சி நகர், சாஸ்திரி நகர், பாபு நகர், அம்பேத்கார் நகர், உழைப்பாளார் நகர், இந்திராநகர், லட்சுமி நகர், பாரதி நகர் ஏரியாவிலும், புழல் பகுதியான அழகிரி தெரு, என்.எஸ்.சி போஸ் தெரு, தண்டல்கழனி, சாமியார் மடம், பாபாநகர், வடகரை, ஆரோன் உல்லாச நகர் பகுதியை சுற்றியுள்ள இடங்களிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும், சோத்துப்பெரும்பேடு பகுதியான புதூர், கும்மணுர், அங்காடு, கொக்குமாடு, கணபதி நகர், அருமந்தி, திருநீலை சுற்றியுள்ள பகுதி மற்றும் ஆவடி பகுதிகளான ஜெ பி நகர், பவர் லைன் சாலை, பிருந்தாவன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலும், அதோடு மாதாவரம் பகுதிகளான கே கே ஆர் நகர், அம்பேத்கார் நகர், திருவள்ளுவர் தெரு, அண்ணாநகர், சத்யராஜ் நகரிலும் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

கூடுதலாக அண்ணாசாலை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அருணச்சலம் தெரு, போலிஸ் குடியிருப்பு, தெற்கு கூவம் ரோடு, சிந்தாதரிப்பேட்டை, எல் ஜி என் ரோடு, ராமசாமி தெருவிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மயிலாப்பூர் பகுதிகளான இருசப்பர், தேவராஜ் முதலி, ஜே ஜே கான், சி.ஐ.டி காலனி மெயின் ரோடு பகுதி, சூரப்பன், டாக்டர் பெசன்ட் ரோடு, ரெகிஜா காம்பிளக்ஸ், கற்பகம் அவென்யூ 1, 2, 3 தெரு, பாலாஜிநகர் பகுதி,திருவல்லிக்கேணி நெஞ்சாலை, ஹாடவுஸ் ரோடு, திருமூர்த்தி நகர், நுங்கம்பாக்கம் நெஞ்சாலை, சிவராமன் தெரு, கரீம் சுபேட்கார் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (29-06-2021) மின் விநியோகம் 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நிறுத்தப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்