'கொரோனா தடுப்பூசி போட.. தயார் நிலையில்'.. 'பிரபல' தனியார் மருத்துவமனை நிர்வாகம்! எப்போது கிடைக்கும்? என்னென்ன பக்க விளைவுகள் வரும்? மருத்துவர் பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அப்போலோ செய்து வரும் ஏற்பாடுகள் என்னென்ன என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை தொற்று நோய் நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய அவர், “தடுப்பூசி சீக்கிரம் வந்துவிடும். பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், சீரம் நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி, பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி உள்ளிட்டவற்றில், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி அனுமதி பெற்றிருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போடுவதால் என்ன மாதிரியான அடிப்படை பக்க விளைவுகள் உடனடியாக ஏற்படுகின்றன என்பது குறித்த அறிக்கைகளும் வெளியாகியுள்ளன. அதன்படி ஊசி போட்டவுடன் கைகளில் வலி இருக்கும், ஒரு அயர்ச்சியும், மிக அரிதாக காய்ச்சலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவை பொருத்தவரை தடுப்பு மருந்துகள் முதற்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மருத்துவ துறை சார்ந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு போடப்படும். அடுத்தகட்டமாக வயதில் மூத்தவர்களுக்கு இது போடப்படும். மூன்றாவது கட்டமாக அத்தியாவசிய சேவைப் பணிகளில் இருப்பவர்களான காவல்துறையினர், ஆசிரியர்கள் ராணுவவீரர்கள் உள்ளிட்டோருக்கு போடப்படும் என்று தெரிகிறது.
இறுதியாகவே பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த மூன்று தடுப்பூசிகளையும் குழந்தைகள் கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம் ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களை விடவும் புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்டு நோயால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தடுப்பூசி வந்தாலும் இப்போது கடைபிடித்து வரும் தடுப்பு முறைகளான மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி, சமூக விலகல் உள்ளிட்டவற்றை கடைபிடித்து வருவது அடுத்து 9 மாதங்களுக்கு அவசியம்” என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்