பொங்கல் விடுமுறைக்கு சிறப்புப் பேருந்துகள் இருக்கா?- தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொங்கல் பண்டிகைக்காக சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக சென்னையில் இருந்து பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பண்டிகை காலத்தில் பயணம் செய்வார்கள். இதனால் அதிகப்படியான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த சூழலில் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இந்த சூழலில் வருகிற ஜனவரி 9-ம் தேதி மற்றும் 16-ம் தேதிக்கான பேருந்துகள் முன்பதிவு நிறுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை 11-01-2022 முதல் 13-01-2022 வரையில் சென்னையில் இருந்து சுமார் 10,300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பிற மாவட்டங்களில் இருந்து 6,468 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மற்ற செய்திகள்