பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு... அதிமுக பிரமுகர் உட்பட... மேலும் 3 பேரை அதிரடியாக கைது செய்த சிபிஐ!.. சிக்கியது எப்படி?.. பதறவைக்கும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோவை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு... அதிமுக பிரமுகர் உட்பட... மேலும் 3 பேரை அதிரடியாக கைது செய்த சிபிஐ!.. சிக்கியது எப்படி?.. பதறவைக்கும் பின்னணி!!

கடந்த 2019ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர், தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் வசந்த்குமார், சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர், அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல இளம்பெண்களை ஏமாற்றி பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இந்த பாலியல் கொடூர வழக்கு தமிழகத்தையே அப்போது உலுக்கியது.

இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் விசாரணையை சிபிஐ கையில் எடுத்தது. சிபிஐ கடந்த ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேலும் 3 பேர் பிடிபட்டுள்ளனர்.

அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், பாபு என்கிற மைக் பாபு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைதான 3 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோவை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதாவது ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ கூறுகையில், பொள்ளாச்சி வழக்கில் மேலும் 2 பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறியுள்ளது.

இந்த சமூகம் பாதிக்கப்பட்ட பெண்களையே குறை கூறுவதால், ஒரு பெண், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியில் கூறுவது கடினம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி நேற்று ஒரு வழக்கில் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது 2 பெண்கள் அளித்த வாக்குமூலத்தால் பொள்ளாச்சி வழக்கில் மேலும் 3 பேர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட பொள்ளாச்சி அதிமுக மாணவர் அணி செயலாளர் அருளானந்தத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

மற்ற செய்திகள்