Darbar USA

'சிக்கிய கடிதம்'... 'அவிழாத மர்மம்'... 'மாணவிக்கு என்னதான் நடந்துச்சு'... வெளியான பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை செய்துள்ள விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

'சிக்கிய கடிதம்'... 'அவிழாத மர்மம்'... 'மாணவிக்கு என்னதான் நடந்துச்சு'... வெளியான பரபரப்பு தகவல்!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவருடைய மகள் நிவேதா. இவர் சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்சி தாவரவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த இவர், நேற்று முன்தினம் மின் விசிறியில் துப்பட்டாவால் நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், '' மாணவி நிவேதாவுடன் தங்கியிருந்த மாணவிகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வறிக்கை தயாரிப்பதற்காக கள ஆய்வுக்கு சென்று விட்டனர். இதனால் நிவேதா மட்டும் விடுதியில் தனியாக இருந்துள்ளார். இதனிடையே மாணவியின் டைரி, காதல் கடிதம் மற்றும் செல்போனை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளார்கள்.

அந்த காதல் கடிதம் இளைஞர் ஒருவருக்கு நிவேதா எழுதியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். நிவேதா இளைஞர் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த இளைஞர் நிவேதாவின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் நிவேதா கடுமையான மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக மாணவி தனியாக இருந்த நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே மாணவி நிவேதா விடுதியில் கடந்த 10-ந் தேதி அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். ஆனால் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தான் மாணவிகள் வார்டனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுவும் சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாணவியின் செல்போனில் பதிவாகி உள்ள எண்களை ஆய்வு செய்து, அவர் யார், யாரிடம் பேசி உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், முழுமையான விசாரணை முடிந்த பின்பு தான், நிவேதாவின் தற்கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

SUICIDEATTEMPT, COLLEGESTUDENT, PERIYAR UNIVERSITY, HANG, HOSTEL, NIVETHITHA