"கலவரம் நடந்த வேளையில்"... "ரூ.18 லட்சம் அபேஸ்?!"... "செங்கல்பட்டு டோல்கேட் சர்ச்சை"...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலின்போது, 18 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாக வழக்குப்பதிவாகியுள்ள சம்பவம் பரபரப்பைக்  கிளப்பியுள்ளது.

"கலவரம் நடந்த வேளையில்"... "ரூ.18 லட்சம் அபேஸ்?!"... "செங்கல்பட்டு டோல்கேட் சர்ச்சை"...

குடியரசு தினத்தன்று, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பெரிய மோதலாக மாறிப்போனது. மேலும், அந்த வழியில் வந்த வாகன ஓட்டிகளும், சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.

இதன் விளைவாக, மோதலில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் என 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சுங்கச்சாவடியில் நடந்த மோதலின்போது 18 லட்சம் ரூபாய் பணத்தைக் காணவில்லை என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

TOLLPLAZA, MONEY, MISSING